• May 17 2024

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளி தெரிவு..!samugammedia

Sharmi / May 4th 2023, 10:01 am
image

Advertisement

உலக வங்கியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சீக்கிய குடும்பமொன்றில் பிறந்த 63 வயதான அஜய் பாங்கா, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர்  2010 ஆம் ஆண்டு முதல்  2021 ஆம் ஆண்டு வரை மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்திருந்தார்.

அத்தோடு அஜய் பாங்கா,  எதிர்வரும் ஜூன் 2 ஆம்  திகதி முதல் 5 வருடங்களுக்கு  உலக வங்கியின் தலைவராக கடமையாற்றவுள்ளார்.

வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட உலக வங்கியின் தலைவராக அமெரிக்கப் பிரஜையொருவர்  பதவி வகிப்பது பாரம்பரியமாக கூறப்படுகின்றது.

அது மட்டுமன்றி , உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மெல்பாஸ் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அஜய் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் உலக வங்கியை திறமையாக நிர்வகிப்பார் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளி தெரிவு.samugammedia உலக வங்கியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் சீக்கிய குடும்பமொன்றில் பிறந்த 63 வயதான அஜய் பாங்கா, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அவர்  2010 ஆம் ஆண்டு முதல்  2021 ஆம் ஆண்டு வரை மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்திருந்தார். அத்தோடு அஜய் பாங்கா,  எதிர்வரும் ஜூன் 2 ஆம்  திகதி முதல் 5 வருடங்களுக்கு  உலக வங்கியின் தலைவராக கடமையாற்றவுள்ளார். வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட உலக வங்கியின் தலைவராக அமெரிக்கப் பிரஜையொருவர்  பதவி வகிப்பது பாரம்பரியமாக கூறப்படுகின்றது.அது மட்டுமன்றி , உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மெல்பாஸ் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அஜய் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் உலக வங்கியை திறமையாக நிர்வகிப்பார் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement