ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அனைவரையும் கவர்கின்றது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் (Mixed reality headset) மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை நிலையத்தை நேற்றைய தினம் மும்பையில் திறந்து வைத்துள்ளது.
அதிகளவான மக்கள் முன்னிலையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதனை நேற்றுக் காலை திறந்து வைத்துள்ளதுடன், பின்னர் அங்கிருந்த பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை நினைவுறுத்தும் வகையில் புதிய விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய விற்பனை நிலையத்தில் ஆப்பிள் ஐஃபோன், ஆப்பிள் கைக்கடிகாரம் போன்றவற்றை வாங்குவதற்கு பலர் முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் நின்றுள்ளனர்.
அவர்களில் பலர், மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப் படம் பொறித்த டி-சட்டை அணிந்திருந்ததுடன், சிலர் ஆப்பிள் நிறுவன சின்னம் போல தங்களது தலை முடியை திருத்தி இருந்தனர்.
ஆப்பிள் பொருள்களின் தயாரிப்பை சீனாவிலிருந்து மாற்றுவதற்கும் விற்பனையைச் சந்தைப்படுத்துவதற்கும் தென்கிழக்கு ஆசியா மீது ஆப்பிளின் கவனம் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு- வரவுள்ள புதிய மாடல்samugammedia ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அனைவரையும் கவர்கின்றது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் (Mixed reality headset) மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை நிலையத்தை நேற்றைய தினம் மும்பையில் திறந்து வைத்துள்ளது. அதிகளவான மக்கள் முன்னிலையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதனை நேற்றுக் காலை திறந்து வைத்துள்ளதுடன், பின்னர் அங்கிருந்த பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை நினைவுறுத்தும் வகையில் புதிய விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். புதிய விற்பனை நிலையத்தில் ஆப்பிள் ஐஃபோன், ஆப்பிள் கைக்கடிகாரம் போன்றவற்றை வாங்குவதற்கு பலர் முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் நின்றுள்ளனர்.அவர்களில் பலர், மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப் படம் பொறித்த டி-சட்டை அணிந்திருந்ததுடன், சிலர் ஆப்பிள் நிறுவன சின்னம் போல தங்களது தலை முடியை திருத்தி இருந்தனர்.ஆப்பிள் பொருள்களின் தயாரிப்பை சீனாவிலிருந்து மாற்றுவதற்கும் விற்பனையைச் சந்தைப்படுத்துவதற்கும் தென்கிழக்கு ஆசியா மீது ஆப்பிளின் கவனம் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.