• May 04 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கும் பயப்படும் நவீன பயங்கரவாதிகள் - திலும் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்! samugammedia

raguthees / May 2nd 2023, 12:40 am
image

Advertisement

நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கண்டு அச்சமடைந்துள்ளார்கள் எனவும் திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது திலும் அமுனுகம மேலும் தெரிவிக்கையில், 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம்.ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில் உரிமை என்று குறிப்பிட்டுக் கொண்டு பேராசிரியர்கள் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நவீன பயங்கரவாதிகள் தான் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்கள். திருத்தங்களின்றி இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினரது முறையற்ற செயற்பாடு ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கும் பயப்படும் நவீன பயங்கரவாதிகள் - திலும் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல் samugammedia நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கண்டு அச்சமடைந்துள்ளார்கள் எனவும் திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது திலும் அமுனுகம மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம்.ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில் உரிமை என்று குறிப்பிட்டுக் கொண்டு பேராசிரியர்கள் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நவீன பயங்கரவாதிகள் தான் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்கள். திருத்தங்களின்றி இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினரது முறையற்ற செயற்பாடு ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement