• Jan 11 2025

நிலுவையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 3rd 2025, 3:16 pm
image

  

ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையாக சுமார் 30 பில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன   தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 600,000 ஓய்வூதியதாரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 1992 முதல் சில ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிலுவையில் உள்ள ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையை துரிதமாக வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுடன்  கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நிலுவையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்   ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையாக சுமார் 30 பில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன   தெரிவித்துள்ளார்.இதனால் சுமார் 600,000 ஓய்வூதியதாரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 1992 முதல் சில ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் நிலுவையில் உள்ள ஓய்வூதிய நிலுவை மற்றும் பணிக்கொடையை துரிதமாக வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுடன்  கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement