• May 14 2024

புலமைப் பரீட்சையில் மாணவர்களுக்கு அநீதி- ஜோசப் ஸ்டாலின் கவலை!

Sharmi / Dec 19th 2022, 5:50 pm
image

Advertisement

நேற்றைய தினம் புலமைப் பரீட்சை நடந்து முடிந்து விட்டது. விசேஷமாக ஒரு பரீட்சை நிலையத்தில் பரீட்சை வினாத்தாள் மாறிக் கொடுக்கப்பட்டதால் 11 மாணவர்களுக்கு பாரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது. எனவே இது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.அதற்கு என்ன மாற்று நிலைமை செய்ய போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலமைப் பரீட்சையில் இப்படியான சம்பவங்கள் பரீட்சை நிலையங்களில் இடம்பெறுவது என்பது மிகவும் பிழையானதாகும்.  புலமை பரீட்சையானது பெரியதொரு பரீட்சையாக உள்ளது. இந்த புலமை பரீட்சை வைக்க வேண்டுமா என்ற பிரச்சினை எங்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் பாரிய நெரிசலுக்கு உள்வாங்கப்படுகின்ற பரீட்சை தான் இது.

இந்த புலமை பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களேயே அரசாங்கம் பார்க்கின்றது.அடிமட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் தொடர்பாக அரசாங்கமோ,பாடசாலைகளையோ ஒரு நடவடிக்கையும் இல்லை.

கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிக்கப்பட்டது என்னவெனில் இந்த பரீட்சையில் அடிமட்டத்தில் இருக்கின்ற சில மாணவர்களுக்கு எழுத இயலாத நிலைமை ,கையெழுத்து இட முடியாத பிரச்சினை.

ஆகவே இதுக்கு ஒரு தீர்வான முடிவு இல்லை .இது ஒரு முடிவு எடுக்கா விடின் நாங்கள் கல்வியில் முன்னுக்கு போக முடியாது என்று தான் நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.

புலமைப் பரீட்சையில் மாணவர்களுக்கு அநீதி- ஜோசப் ஸ்டாலின் கவலை நேற்றைய தினம் புலமைப் பரீட்சை நடந்து முடிந்து விட்டது. விசேஷமாக ஒரு பரீட்சை நிலையத்தில் பரீட்சை வினாத்தாள் மாறிக் கொடுக்கப்பட்டதால் 11 மாணவர்களுக்கு பாரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது. எனவே இது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.அதற்கு என்ன மாற்று நிலைமை செய்ய போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,புலமைப் பரீட்சையில் இப்படியான சம்பவங்கள் பரீட்சை நிலையங்களில் இடம்பெறுவது என்பது மிகவும் பிழையானதாகும்.  புலமை பரீட்சையானது பெரியதொரு பரீட்சையாக உள்ளது. இந்த புலமை பரீட்சை வைக்க வேண்டுமா என்ற பிரச்சினை எங்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் பாரிய நெரிசலுக்கு உள்வாங்கப்படுகின்ற பரீட்சை தான் இது.இந்த புலமை பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களேயே அரசாங்கம் பார்க்கின்றது.அடிமட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் தொடர்பாக அரசாங்கமோ,பாடசாலைகளையோ ஒரு நடவடிக்கையும் இல்லை.கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிக்கப்பட்டது என்னவெனில் இந்த பரீட்சையில் அடிமட்டத்தில் இருக்கின்ற சில மாணவர்களுக்கு எழுத இயலாத நிலைமை ,கையெழுத்து இட முடியாத பிரச்சினை.ஆகவே இதுக்கு ஒரு தீர்வான முடிவு இல்லை .இது ஒரு முடிவு எடுக்கா விடின் நாங்கள் கல்வியில் முன்னுக்கு போக முடியாது என்று தான் நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement