• Sep 30 2024

சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டி- புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு தங்க பதக்கம்..!Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 10:02 pm
image

Advertisement

மாத்தறையில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுனர் திறந்த போட்டிகளில்  புத்தளம் நகரைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புத்தளத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த போட்டி மாத்தறை -  கொடவில்ல விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) நடைபெற்றது.



இதன் போதே குறித்த சகோதர்கள் இருவரும் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எப்.எம் ஹுமாயூன் , உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும்,  எம்.எப்.எம் துபையில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் , 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.



குறித்த சாதனை வீரர்கள் இருவரும் கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல்-அக்‌ஷா தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதுடன், புத்தளம் பாத்திமா கல்லூரிக்கும் இணைப்பு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடம் செப்டம்பர் மாதம் மலேசியா கோலாலம்பூரில்  நடைபெற்ற 35 வது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய உடற்கல்வி ஆசிரியர்களான குறித்த சகோதரர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.

உயரம் பாய்தலில் எம்.எப்.எம்.ஹூமாயூன் தங்கப் பதக்கமும், 200 மீட்டர் ஒட்டப்போட்டியில்  எம்.எப்.எம்.துபைல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புத்தளம் மாவட்ட மக்களுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் விருதுகளை பெற்ற, பயிற்சிவிப்பாளர் அங்கீகாரம் பெற்ற மேற்படி இரண்டுஆசிரியர்களின் முயற்சியில் புத்தளத்தில் முதற்தடவையாக மெய்வல்லுனர்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மண்ணில் இருந்து தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளுக்கு புத்தளத்தில் இருந்து வீரர்களை தயார் செய்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே குறித்த மெய்வல்லுனர்களுக்கான பயிற்சிக்கூடத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டி- புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு தங்க பதக்கம்.Samugammedia மாத்தறையில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுனர் திறந்த போட்டிகளில்  புத்தளம் நகரைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புத்தளத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்த போட்டி மாத்தறை -  கொடவில்ல விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) நடைபெற்றது.இதன் போதே குறித்த சகோதர்கள் இருவரும் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.இதன் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எப்.எம் ஹுமாயூன் , உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும்,  எம்.எப்.எம் துபையில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் , 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.குறித்த சாதனை வீரர்கள் இருவரும் கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல்-அக்‌ஷா தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதுடன், புத்தளம் பாத்திமா கல்லூரிக்கும் இணைப்பு செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, இந்த வருடம் செப்டம்பர் மாதம் மலேசியா கோலாலம்பூரில்  நடைபெற்ற 35 வது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய உடற்கல்வி ஆசிரியர்களான குறித்த சகோதரர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.உயரம் பாய்தலில் எம்.எப்.எம்.ஹூமாயூன் தங்கப் பதக்கமும், 200 மீட்டர் ஒட்டப்போட்டியில்  எம்.எப்.எம்.துபைல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புத்தளம் மாவட்ட மக்களுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் விருதுகளை பெற்ற, பயிற்சிவிப்பாளர் அங்கீகாரம் பெற்ற மேற்படி இரண்டுஆசிரியர்களின் முயற்சியில் புத்தளத்தில் முதற்தடவையாக மெய்வல்லுனர்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.புத்தளம் மண்ணில் இருந்து தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளுக்கு புத்தளத்தில் இருந்து வீரர்களை தயார் செய்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே குறித்த மெய்வல்லுனர்களுக்கான பயிற்சிக்கூடத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement