வரலாற்று சிறப்பு மிக்க இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்! (படங்கள் இணைப்பு)

வரலாற்று சிறப்பு மிக்க இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04.06 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா 24 வது திருவிழா இரதோற்சவம் இடம்பெற்றது.

கருவரையில் வீற்றுயிருக்கும் இணுவையூர் கந்தன், வள்ளி, தெய்வானை விநாயகர், மற்றும் சிவன், பார்வதிக்கு ஆகிய தெய்வங்களுக்கு அபிசேக ஆராதணைகள் இடம்பெற்றும் எம்பெருமான் சமேதரக பீடத்தில் உள்வீதியுடாக வலம்வந்து முத்தேர் இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சரியர்கள் நடாத்திவைத்தனர். இங்கு தமது நேர்த்தி கடனை தூக்குகாவடி எடுத்தும் கற்பூரச்சட்டி எடுத்து நிறைவேற்றிக்கொண்டனர்.

இதில் நாளை 28.06 தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹாற்சவத்துடன் நிறைவடையும்.

பெருந்திராளன பக்தர்கள் கலந்துகொண்டு இணுவையூர் கந்தசாமியின் அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை