• May 06 2024

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 225 ஓட்டங்கள் வெற்றி இலக்கு..!

Tamil nila / Apr 24th 2024, 9:53 pm
image

Advertisement

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

 குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

 போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

 அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 225 ஓட்டங்கள் வெற்றி இலக்கு. இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.  குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.  போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது

Advertisement

Advertisement

Advertisement