• May 19 2024

டயனா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணை...!

Anaath / Oct 25th 2023, 11:43 am
image

Advertisement

கடந்த 20 ஆம் திகதி  நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று முற்பகல் 11.00 மணிக்கு முதன்முறையாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது  

இவ்வேளை குறித்த சிசிரிவி காணொளிகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

இந்த குழுவில அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும், குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாவதால், பொருத்தமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்து அனுப்புமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கமைய முன்மொழியப்படும் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



டயனா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணை. கடந்த 20 ஆம் திகதி  நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று முற்பகல் 11.00 மணிக்கு முதன்முறையாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது  இவ்வேளை குறித்த சிசிரிவி காணொளிகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த குழுவில அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.எவ்வாறாயினும், குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாவதால், பொருத்தமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்து அனுப்புமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.இதற்கமைய முன்மொழியப்படும் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement