• Jul 18 2025

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்!

shanuja / Jun 24th 2025, 11:30 am
image

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை நிறுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ அறிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. 

 

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் கடந்த 12 நாள்களாக இடம்பெற்று வந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. 


கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. 


அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. 


 

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் அமெரிக்காவின் தலையீடு நிலவியதை அடுத்து  ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு  இணங்கியதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  


ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்து பதில் வழங்கியிருந்தார். 


இந்த நிலையில், இஸ்ரேல் உடன்  போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே  போர் நிறுத்தம் இல்லை என்று  கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை நிறுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ அறிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.  இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் கடந்த 12 நாள்களாக இடம்பெற்று வந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.  இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் அமெரிக்காவின் தலையீடு நிலவியதை அடுத்து  ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு  இணங்கியதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்து பதில் வழங்கியிருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல் உடன்  போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே  போர் நிறுத்தம் இல்லை என்று  கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now