• May 04 2024

இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..!

Tamil nila / Apr 14th 2024, 7:49 am
image

Advertisement

ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கு மேற்பட்ட ட்ரான்களை  ஈரான் ஏவியது. என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான் மிகவும் அழிவுகரமான ஏவுகணைகளை ஏவுவதாகவும் அறிவித்தது.

நான்காவது கட்டமாக இஸ்ரேலுக்கு எதிராக இரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டதாகவம் கூறியுள்ளது.

இதனையடுத்து ஜோர்தான், ஈரான், ஈராக்  மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு,  விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜோர்தான் தனது வான்வெளியை மூடியுள்ள போதும் இஸ்ரேல் போர்விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்துவதற்கு ஜோர்தான் அணுமதி வழங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளது. 

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்( Golan Heights), நெவாடிம்(Nevatim),  டிமோனா(Dimona) மற்றும் ஈலாட்( Eilat) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்  அறிவிக்கும்  வரை பாதுகாப்பு இடங்களுக்கு அருகில் இருக்குமாறு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு. ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கு மேற்பட்ட ட்ரான்களை  ஈரான் ஏவியது. என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான் மிகவும் அழிவுகரமான ஏவுகணைகளை ஏவுவதாகவும் அறிவித்தது.நான்காவது கட்டமாக இஸ்ரேலுக்கு எதிராக இரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தி வருகின்றது.இந்நிலையில், ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டதாகவம் கூறியுள்ளது.இதனையடுத்து ஜோர்தான், ஈரான், ஈராக்  மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு,  விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை ஜோர்தான் தனது வான்வெளியை மூடியுள்ள போதும் இஸ்ரேல் போர்விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்துவதற்கு ஜோர்தான் அணுமதி வழங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்( Golan Heights), நெவாடிம்(Nevatim),  டிமோனா(Dimona) மற்றும் ஈலாட்( Eilat) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்  அறிவிக்கும்  வரை பாதுகாப்பு இடங்களுக்கு அருகில் இருக்குமாறு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement