• May 21 2024

வாராந்தம் 10 பேரிற்கு மரணதண்டனை நிறைவேற்றும் ஈரான் - ஐ. நா தகவல்..! samugammedia

Tamil nila / May 9th 2023, 7:05 pm
image

Advertisement

ஈரானில்  வாராந்தம்  சராசரியாக 10 இற்கும் அதிகளவானோர் தூக்கிலிடப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதுடன், அதில் பெரும்பலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். 

ஆயினும்  உண்மையான எண்ணிக்கை அதனிலும்  அதிகமாக இருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இவ்வருடம் வாராந்தம் சராசரியாக 10 பேரை ஈரான்  தூக்கிலிடுவதாகவும், கடந்த வருடம் 580 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும்  மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர்  வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, சுவீடன்  - ஈரானியர் ஒருவரை பயங்கரவாத குற்றச்சாட்டில் ஈரான் தூக்கிலிட்டமைக்கு சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

அது மட்டுமட்டுமின்றி நேற்றைய தினம்(8) த இறைநிந்தனை குற்றச்சாட்டில் இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 

கடந்த 14 நாட்களில் குறைந்தபட்சம் 45 பேர் தூக்கிலிடப்பட்டனர் எனவும், இவர்களில் 22 பேர் சிறுபான்மை பலோச் இனத்தை சேர்ந்தவர்கள்  எனவும் ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.

வாராந்தம் 10 பேரிற்கு மரணதண்டனை நிறைவேற்றும் ஈரான் - ஐ. நா தகவல். samugammedia ஈரானில்  வாராந்தம்  சராசரியாக 10 இற்கும் அதிகளவானோர் தூக்கிலிடப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதுடன், அதில் பெரும்பலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஆயினும்  உண்மையான எண்ணிக்கை அதனிலும்  அதிகமாக இருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.இவ்வருடம் வாராந்தம் சராசரியாக 10 பேரை ஈரான்  தூக்கிலிடுவதாகவும், கடந்த வருடம் 580 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும்  மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர்  வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை, சுவீடன்  - ஈரானியர் ஒருவரை பயங்கரவாத குற்றச்சாட்டில் ஈரான் தூக்கிலிட்டமைக்கு சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.அது மட்டுமட்டுமின்றி நேற்றைய தினம்(8) த இறைநிந்தனை குற்றச்சாட்டில் இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களில் குறைந்தபட்சம் 45 பேர் தூக்கிலிடப்பட்டனர் எனவும், இவர்களில் 22 பேர் சிறுபான்மை பலோச் இனத்தை சேர்ந்தவர்கள்  எனவும் ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement