• Mar 29 2024

ChatGPT தொழில்நுட்பம் தோல்வியா? ஆராய்ச்சியில் வெளிவந்த தகவல்!

Tamil nila / Jan 28th 2023, 4:32 pm
image

Advertisement

உலக அளவில் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து அண்மையில் கலந்துரையாடல்கள் அதிகரித்துள்ளன.


கேள்விகளுக்குப் பதில் கூறுவது, மின்னஞ்சல், கடிதம், கட்டுரை எழுதுவது ஆகியவற்றைச் செய்யக்கூடிய கருவியால் பள்ளிகளில் ஏமாற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற அக்கறையும் எழுந்துள்ளது.


இந்நிலையில் ChatGPTஐச் சோதிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனத்தன் சோய் இறங்கியுள்ளார்ஃ


மாணவர்களுக்குக் கொடுத்த தேர்வை அவர் ChatGPTக்கும் அளித்தார்.


சோதனையின் முடிவுகளை அவர் ChatGPT Goes To Law School எனும் கட்டுரையில் வெளியிட்டார்.

ChatGPT கருவி ஒரு சிறந்த சட்டக்கல்வி மாணவர் இல்லை என்று அவர் Twitterஇல் குறிப்பிட்டார்.


தேர்வுகளில் C+ மதிப்பளவைப் பெற்ற ChatGPT பெரும்பாலான மாணவர்களைவிட மோசமாகச் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டப்படிப்புக்கு அதன் அடிப்படை வலுவாக இருந்தாலும் மாணவர்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சில திறன்களை அது கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டது.


இருப்பினும் அது பாடம் கற்றுக்கொடுப்பதற்கு உதவியாக இருக்கலாம் என்று பேராசிரியர் சோய் சொன்னார்.

ChatGPT தொழில்நுட்பம் தோல்வியா ஆராய்ச்சியில் வெளிவந்த தகவல் உலக அளவில் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இது குறித்து அண்மையில் கலந்துரையாடல்கள் அதிகரித்துள்ளன.கேள்விகளுக்குப் பதில் கூறுவது, மின்னஞ்சல், கடிதம், கட்டுரை எழுதுவது ஆகியவற்றைச் செய்யக்கூடிய கருவியால் பள்ளிகளில் ஏமாற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற அக்கறையும் எழுந்துள்ளது.இந்நிலையில் ChatGPTஐச் சோதிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனத்தன் சோய் இறங்கியுள்ளார்ஃமாணவர்களுக்குக் கொடுத்த தேர்வை அவர் ChatGPTக்கும் அளித்தார்.சோதனையின் முடிவுகளை அவர் ChatGPT Goes To Law School எனும் கட்டுரையில் வெளியிட்டார்.ChatGPT கருவி ஒரு சிறந்த சட்டக்கல்வி மாணவர் இல்லை என்று அவர் Twitterஇல் குறிப்பிட்டார்.தேர்வுகளில் C+ மதிப்பளவைப் பெற்ற ChatGPT பெரும்பாலான மாணவர்களைவிட மோசமாகச் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டப்படிப்புக்கு அதன் அடிப்படை வலுவாக இருந்தாலும் மாணவர்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சில திறன்களை அது கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டது.இருப்பினும் அது பாடம் கற்றுக்கொடுப்பதற்கு உதவியாக இருக்கலாம் என்று பேராசிரியர் சோய் சொன்னார்.

Advertisement

Advertisement

Advertisement