• May 17 2024

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..? – அவரே வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 18th 2023, 8:52 am
image

Advertisement

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுடனோ அல்லது சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலுடனோ தனக்கு எந்த தொடர்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரேயொரு முறை இவர்களை சந்தித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய போதகர்களுடன் முன்னாள் ஜனாதிபதிக்கு தொடபுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் அதனை நிராகரித்துள்ளார்.

மதங்களை அவமதிக்கும் விதத்தில் ஜெரோம் பெர்ணாண்டோ தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  நாட்டில் சமூகஐக்கியமின்மைக்கோ  குரோதத்திற்கோ இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும்  அனைத்து பிரிவினைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் மிகவும் கடுமையாக பாடுபட்ட ஒரு சூழ்நிலையில்  தனிநபர்கள் இலங்கையில் மதஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக கண்டிக்கின்றேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனக்கு சிம்பாப்வே போதகர் அல்லது ஜெரோம் பெர்ணான்டோவுடன் எந்த தொடர்பும் கிடையாது நான் பிரதமராகயிருந்தவேளை அவரது அலுவலகத்திலிருந்து என்னை சந்திப்பதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் அக்காலப்பகுதியில் மத விவகாரங்களிற்கான அமைச்சராக  பதவிவகித்ததால்  ஜெரோம் அலுவலகம் என்னை சந்திப்பதற்காக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டது நான் அதற்கு இணங்கினேன் என  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றது அன்று என்னுடனும் மனைவியுடனும் சேர்ந்து இரண்டுபோதகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அது உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் ஊடகங்களில் படங்கள் வெளியிடப்பட்டன  என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச நான் அவர்களை அன்று மாத்திரம் சந்தித்தேன்  அதன் பின்னர் உத்தியோகபூர்வ சந்திப்பு எதிலும் ஈடுபடவில்லை  தனிப்பட்ட தொடர்புகளும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மதவிவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் நான் எப்போதும்  மததலைவர்கள் மதஅமைப்புகளுடன் தொடர்புபட்டவர்களை சந்திப்பதற்கு முன்னுரிமை வழங்குவேன்  நல்லெண்ண அடிப்படையிலும் அவர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் நான் அவ்வாறான சந்திப்புகளில் ஈடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா. – அவரே வெளியிட்ட தகவல் samugammedia சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுடனோ அல்லது சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலுடனோ தனக்கு எந்த தொடர்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஒரேயொரு முறை இவர்களை சந்தித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய போதகர்களுடன் முன்னாள் ஜனாதிபதிக்கு தொடபுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் அதனை நிராகரித்துள்ளார்.மதங்களை அவமதிக்கும் விதத்தில் ஜெரோம் பெர்ணாண்டோ தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  நாட்டில் சமூகஐக்கியமின்மைக்கோ  குரோதத்திற்கோ இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும்  அனைத்து பிரிவினைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் மிகவும் கடுமையாக பாடுபட்ட ஒரு சூழ்நிலையில்  தனிநபர்கள் இலங்கையில் மதஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக கண்டிக்கின்றேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனக்கு சிம்பாப்வே போதகர் அல்லது ஜெரோம் பெர்ணான்டோவுடன் எந்த தொடர்பும் கிடையாது நான் பிரதமராகயிருந்தவேளை அவரது அலுவலகத்திலிருந்து என்னை சந்திப்பதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நான் அக்காலப்பகுதியில் மத விவகாரங்களிற்கான அமைச்சராக  பதவிவகித்ததால்  ஜெரோம் அலுவலகம் என்னை சந்திப்பதற்காக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டது நான் அதற்கு இணங்கினேன் என  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அந்த சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றது அன்று என்னுடனும் மனைவியுடனும் சேர்ந்து இரண்டுபோதகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அது உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் ஊடகங்களில் படங்கள் வெளியிடப்பட்டன  என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச நான் அவர்களை அன்று மாத்திரம் சந்தித்தேன்  அதன் பின்னர் உத்தியோகபூர்வ சந்திப்பு எதிலும் ஈடுபடவில்லை  தனிப்பட்ட தொடர்புகளும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.மதவிவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் நான் எப்போதும்  மததலைவர்கள் மதஅமைப்புகளுடன் தொடர்புபட்டவர்களை சந்திப்பதற்கு முன்னுரிமை வழங்குவேன்  நல்லெண்ண அடிப்படையிலும் அவர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் நான் அவ்வாறான சந்திப்புகளில் ஈடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement