• May 03 2024

பொருளாதாரத்தை காரணம் காட்டி தேர்தலை இடை நிறுத்தியமை ஜனநாயகமா..? சிவகுமார் கேள்வி..!samugammedia

Sharmi / Jul 20th 2023, 12:47 pm
image

Advertisement

பொருளாதாரத்தை காரணம் காட்டி ஜனநாயக  ரீதியாக நடத்தபடவேண்டிய தேர்தல்கள் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இவை அடிப்படை மனித உரிமை மீறலாகும். என தியாகிகள் நினைவு தினத்தில் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும் திருகோணமலை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான சி.  சிவகுமார் திருகோணமலையில்  தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று(20)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் என்ற சொல் மூலம் தேர்தல் நிறுத்தம் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் எந்தவிதமான உறுதியான  அறிவிப்பு இன்றி உள்ளுராட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என சொல்வதில் பெருமைப்பட கூடாது மக்கள் ஜனநாயகமாக வாழ வழி விட வேண்டும் தமிழ் மக்கள் யுத்தம் செய்தமைக்கு காரணம் கண்டறியப்பட்டு தீர்க்கப்படும் என்று ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் கூறுகிறார்கள் காலத்தை கடத்தி செல்வதுதான் நடைபெறுகின்றது.  தற்போது இருக்கும் ஜனாதிபதி புதுவிதமான கதை கூறுகின்றார் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒற்றுமை ஒரு பக்கம் இருக்கட்டும் மக்களுக்கான தீர்வு என்ன என்று காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் உறுதியாக கூறுங்கள்.    தமிழ் மக்களின் இடைக்கால தீர்வாக பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படை 13ம் திருத்தசட்ட மூலத்தை கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகிவிடட்டன இந்த ஒப்பந்தம் மூலமாக இரு நாடுகளும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென்றே உறுதி கொள்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில் முன்னெடுப்புகள் ஏதும் இல்லை இந்த மாகாண சபைக்கான தேர்தலை ஜனநாயக ரீதியாக நடாத்தி தமிழ் மக்களின் இடைக்கால தீர்வாக அதிகார பரவலாக்கத்துடன் நடை முறைப்படுத்த வேண்டும். என்றே நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்நாட்டில் பொருளாதார தன்மை நிலையானதாக இல்லாததானாலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறை வெற்றப்படாமல் இருப்பதனாலும் அரசியல் ரீதியான உறுதி தன்மை இல்லாமல் இருப்பதாலும் வெளிநாட்டு முதலீடுகளோ புலம் பெயர் மக்களின் முதலீடுகளோ நாட்டிற்குள் சரியாக வருவதில்லை.   இந்த ஆட்ச்சியாளர்களின் ஒரு சில அமைச்சர்களின் இன துவேசமான பேச்சுகளும் பயத்தினை வரவைக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார பாதிப்புக்களையே நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகின்றன.

ஜனாதிபதியின் கூற்று தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டுமென்பது அது காலத்துக்கு தேவையென  இருந்தால் உறுதியான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அது ஜனநாயக ரீதியாக ஏற்று கொள்ளப்பட கூடிய விடயமாக இருந்தால் விடயமாக இருந்தால் நிட்ச்சயமாக தமிழ் மக்களும் தமிழ் காட்சிக்களும் ஒற்றுமைபடுவார்கள் ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் இருந்தால் இடைக்கால தீர்வாககிடைத்த ஒப்பந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை மாவட்ட செயலாளரும்  முன்னாள் நகரசபை உறுப்பினருமான சிவகுமார் வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தை காரணம் காட்டி தேர்தலை இடை நிறுத்தியமை ஜனநாயகமா. சிவகுமார் கேள்வி.samugammedia பொருளாதாரத்தை காரணம் காட்டி ஜனநாயக  ரீதியாக நடத்தபடவேண்டிய தேர்தல்கள் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இவை அடிப்படை மனித உரிமை மீறலாகும். என தியாகிகள் நினைவு தினத்தில் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும் திருகோணமலை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான சி.  சிவகுமார் திருகோணமலையில்  தெரிவித்தார்.ஊடகங்களுக்கு இன்று(20)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் என்ற சொல் மூலம் தேர்தல் நிறுத்தம் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் எந்தவிதமான உறுதியான  அறிவிப்பு இன்றி உள்ளுராட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என சொல்வதில் பெருமைப்பட கூடாது மக்கள் ஜனநாயகமாக வாழ வழி விட வேண்டும் தமிழ் மக்கள் யுத்தம் செய்தமைக்கு காரணம் கண்டறியப்பட்டு தீர்க்கப்படும் என்று ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் கூறுகிறார்கள் காலத்தை கடத்தி செல்வதுதான் நடைபெறுகின்றது.  தற்போது இருக்கும் ஜனாதிபதி புதுவிதமான கதை கூறுகின்றார் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒற்றுமை ஒரு பக்கம் இருக்கட்டும் மக்களுக்கான தீர்வு என்ன என்று காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் உறுதியாக கூறுங்கள்.    தமிழ் மக்களின் இடைக்கால தீர்வாக பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படை 13ம் திருத்தசட்ட மூலத்தை கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகிவிடட்டன இந்த ஒப்பந்தம் மூலமாக இரு நாடுகளும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென்றே உறுதி கொள்கிறார்கள்.ஆனால் நடைமுறையில் முன்னெடுப்புகள் ஏதும் இல்லை இந்த மாகாண சபைக்கான தேர்தலை ஜனநாயக ரீதியாக நடாத்தி தமிழ் மக்களின் இடைக்கால தீர்வாக அதிகார பரவலாக்கத்துடன் நடை முறைப்படுத்த வேண்டும். என்றே நாம் வலியுறுத்துகின்றோம். இந்நாட்டில் பொருளாதார தன்மை நிலையானதாக இல்லாததானாலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறை வெற்றப்படாமல் இருப்பதனாலும் அரசியல் ரீதியான உறுதி தன்மை இல்லாமல் இருப்பதாலும் வெளிநாட்டு முதலீடுகளோ புலம் பெயர் மக்களின் முதலீடுகளோ நாட்டிற்குள் சரியாக வருவதில்லை.   இந்த ஆட்ச்சியாளர்களின் ஒரு சில அமைச்சர்களின் இன துவேசமான பேச்சுகளும் பயத்தினை வரவைக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார பாதிப்புக்களையே நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகின்றன.ஜனாதிபதியின் கூற்று தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டுமென்பது அது காலத்துக்கு தேவையென  இருந்தால் உறுதியான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அது ஜனநாயக ரீதியாக ஏற்று கொள்ளப்பட கூடிய விடயமாக இருந்தால் விடயமாக இருந்தால் நிட்ச்சயமாக தமிழ் மக்களும் தமிழ் காட்சிக்களும் ஒற்றுமைபடுவார்கள் ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் இருந்தால் இடைக்கால தீர்வாககிடைத்த ஒப்பந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை மாவட்ட செயலாளரும்  முன்னாள் நகரசபை உறுப்பினருமான சிவகுமார் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement