• Jul 16 2025

ரவி, ஷானியை மீண்டும் சேவையில் இணைக்க பேராயர் அழுத்தம்? - உண்மையை வெளிப்படுத்த வேண்டும்! வலியுறுத்தும் சாகர

Chithra / Jul 15th 2025, 8:34 am
image


பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தலுக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுவதன் உண்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்து மதத்தை சார்ந்த பிள்ளையான் சிறையில் இருந்தவாறு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு பௌத்த சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகிறது. 

கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதலை நடத்தவேண்டிய அவசியம் ராஜபக்ஷர்களுக்கு இருக்கவில்லை.

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியதாகவும், அவரது கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விருவரும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் உண்மைத்தன்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும். யாரை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கத்தோலிக்க சபை எவ்வாறு தீர்மானிக்க முடியும். இந்த அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றமடையக் கூடாது  என்றார்.

ரவி, ஷானியை மீண்டும் சேவையில் இணைக்க பேராயர் அழுத்தம் - உண்மையை வெளிப்படுத்த வேண்டும் வலியுறுத்தும் சாகர பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தலுக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுவதன் உண்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்து மதத்தை சார்ந்த பிள்ளையான் சிறையில் இருந்தவாறு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு பௌத்த சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதலை நடத்தவேண்டிய அவசியம் ராஜபக்ஷர்களுக்கு இருக்கவில்லை.ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியதாகவும், அவரது கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விருவரும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.இதன் உண்மைத்தன்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும். யாரை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கத்தோலிக்க சபை எவ்வாறு தீர்மானிக்க முடியும். இந்த அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றமடையக் கூடாது  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement