• May 21 2024

டலஸ் - அனுர புதிய கூட்டணி ராஜபக்ஷர்களுக்கு சவாலா..? - மொட்டு எம்.பி வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Aug 28th 2023, 7:39 am
image

Advertisement

டலஸ் - அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் (26) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

காலி முகத்திடல் பயங்கரவாத போராட்டத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அரசியலும், ராஜபக்ஷர்களின் அரசியலும் முடிவுக்கு வந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒருதரப்பினர் இன்றும் அரசியல் பிரச்சாரம் செய்து கொள்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.


ராஜபக்ஷர்களின் புண்ணியத்துடன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது குறிப்பிடுகிறார் பொதுஜன பெரமுன என்ற கட்சி ஒன்று இல்லை என்று. கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டலஸ் - அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது.கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்றார்.


டலஸ் - அனுர புதிய கூட்டணி ராஜபக்ஷர்களுக்கு சவாலா. - மொட்டு எம்.பி வெளியிட்ட தகவல் samugammedia டலஸ் - அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.புத்தளம் பகுதியில் (26) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,காலி முகத்திடல் பயங்கரவாத போராட்டத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அரசியலும், ராஜபக்ஷர்களின் அரசியலும் முடிவுக்கு வந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள்.ஆனால் ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒருதரப்பினர் இன்றும் அரசியல் பிரச்சாரம் செய்து கொள்கிறார்கள்.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.ராஜபக்ஷர்களின் புண்ணியத்துடன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது குறிப்பிடுகிறார் பொதுஜன பெரமுன என்ற கட்சி ஒன்று இல்லை என்று. கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.டலஸ் - அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது.கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement