• May 13 2024

85 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதில் கடும் சிக்கல்! samugammedia

Chithra / Aug 28th 2023, 7:34 am
image

Advertisement

நாட்டில் நிலவும் வரட்சியினால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்  291,715 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களில், 84,643 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

யாழ்ப்பாணத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

85 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதில் கடும் சிக்கல் samugammedia நாட்டில் நிலவும் வரட்சியினால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்  291,715 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.அந்த மாவட்டங்களில், 84,643 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement