• May 19 2024

சாதாரண தர பரீட்சை திகதியில் மாற்றமா..? கல்வி அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Apr 25th 2023, 11:53 am
image

Advertisement

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் அமைச்சர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் 20 வயதுக்குள் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்யக் கூடியவாறான கல்வி முறைமையே காணப்படுகிறது.

ஆனால் இலங்கையில் இதற்காக 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டியுள்ளது. எனவே சாதாரண, உயர் பரீட்சைகளும் , பெருபேருகளை வெளியிடலும் தாமதடைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கும்.

இதனைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பரீட்சைகள் ஆணையாளர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெற்றிகரமாக விரைவில் முழுமையாக ஆரம்பமாகும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக மாணவர்களை பயணக்கைதிகளாக்குவதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படக் கூடிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சாதாரண தர பரீட்சை திகதியில் மாற்றமா. கல்வி அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு samugammedia கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஆண்டு உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் அமைச்சர் தெரிவித்தார்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.வெளிநாடுகளில் 20 வயதுக்குள் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்யக் கூடியவாறான கல்வி முறைமையே காணப்படுகிறது.ஆனால் இலங்கையில் இதற்காக 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டியுள்ளது. எனவே சாதாரண, உயர் பரீட்சைகளும் , பெருபேருகளை வெளியிடலும் தாமதடைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கும்.இதனைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பரீட்சைகள் ஆணையாளர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெற்றிகரமாக விரைவில் முழுமையாக ஆரம்பமாகும்.தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக மாணவர்களை பயணக்கைதிகளாக்குவதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படக் கூடிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement