• Jan 08 2025

இலங்கையில் அரிசிப் பற்றாக்குறை? பாடசாலையில் சோறுக்கு பதிலாக மாணவர்களுக்கு ரொட்டி

Chithra / Jan 6th 2025, 1:27 pm
image

  

மொனராகலை  - வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவிற்கு அரிசி மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டி மற்றும் பேரீச்சம்பழம் வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் வினவியபோது, அரிசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு வழங்கப்பட்டதாக உணவு ஒப்பந்தம் மேற்கொண்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள தெபராரா ஜூனியர் பாடசாலையின் 121 மாணவர்களுக்கு, ஒப்பந்ததாரர் சாதம் மற்றும் காய்கறிகள், இறைச்சி, மீன் அல்லது முட்டை மற்றும் பழங்கள் உள்ளிட்ட சீரான உணவுகளை வழங்கியிருக்க வேண்டும். 

எனினும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (03) ரொட்டி மற்றும் பேரிச்சம்பழங்களை வழங்கியுள்ளார்.

பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், பாடசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், 

தனக்கு அரிசி வழங்கும் அரிசி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், அரிசி தட்டுப்பாடு காரணமாக ரொட்டி மற்றும் பேரிச்சம்பழம் வழங்குமாறு ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்ததாகவும் வெல்லவாய வலயப் பணிப்பாளர் சுசில் விஜேதிலக தெரிவித்தார். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுசில் விஜேதிலக தெரிவித்தார்.

இலங்கையில் அரிசிப் பற்றாக்குறை பாடசாலையில் சோறுக்கு பதிலாக மாணவர்களுக்கு ரொட்டி   மொனராகலை  - வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவிற்கு அரிசி மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டி மற்றும் பேரீச்சம்பழம் வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது குறித்து பெற்றோர்கள் வினவியபோது, அரிசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு வழங்கப்பட்டதாக உணவு ஒப்பந்தம் மேற்கொண்ட பெண் தெரிவித்துள்ளார்.ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள தெபராரா ஜூனியர் பாடசாலையின் 121 மாணவர்களுக்கு, ஒப்பந்ததாரர் சாதம் மற்றும் காய்கறிகள், இறைச்சி, மீன் அல்லது முட்டை மற்றும் பழங்கள் உள்ளிட்ட சீரான உணவுகளை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (03) ரொட்டி மற்றும் பேரிச்சம்பழங்களை வழங்கியுள்ளார்.பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், பாடசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், தனக்கு அரிசி வழங்கும் அரிசி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், அரிசி தட்டுப்பாடு காரணமாக ரொட்டி மற்றும் பேரிச்சம்பழம் வழங்குமாறு ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்ததாகவும் வெல்லவாய வலயப் பணிப்பாளர் சுசில் விஜேதிலக தெரிவித்தார். மேலதிக விசாரணைகளின் பின்னர் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுசில் விஜேதிலக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement