காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உணவுக்காகக் காத்திருந்த பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பல காலமாக தொடரும் நிலையில் உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது இன்று காலை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் அரைவாசி பகுதியினர் உணவுக்காகக் காத்திருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இன்று மட்டும் 90 தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஈவிரக்கமின்றி அதிகரித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே இஸ்ரேலின் கொடூர தாக்குதலை நிறுத்தி பாலஸ்தீனியர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உணவுக்காகக் காத்திருந்த பலரைக் கொன்ற இஸ்ரேல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உணவுக்காகக் காத்திருந்த பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பல காலமாக தொடரும் நிலையில் உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காசா மீது இன்று காலை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் அரைவாசி பகுதியினர் உணவுக்காகக் காத்திருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இன்று மட்டும் 90 தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஈவிரக்கமின்றி அதிகரித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே இஸ்ரேலின் கொடூர தாக்குதலை நிறுத்தி பாலஸ்தீனியர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.