• Nov 19 2024

மக்களிடையே மதுப் பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 9th 2024, 12:06 pm
image

மதுசார நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பிற்கேற்றவாறு மதுசார விலையைக் குறைத்து, மக்களின் மதுசார பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல எனவும் மதுசார நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய பில்லியன் கணக்கான வரியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதே உண்மையான கடமையாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சரியான முறையில் மதுசார வரியை அறவிடுவதற்கான பொறிமுறையொன்று இல்லாத காரணத்தினாலும், மதுசார நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் வரி அறவீட்டு முறைமை காணப்படுவதாலும் கடந்த 30.06.2024 வரை ரூபா 1.8 பில்லியன் வரி வருமானத்தை மதுவரித் திணைக்களம் இழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அதிகளவு நிலுவையில் உள்ள மது வரியை அறவிடக் கோறிய பாராளுமன்றக் குழு தலைவரின் பரிந்துரையை மதுவரித் திணைக்களம் நிராகரித்துள்ளது. இவ்வாறான நிலைமையானது மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் பாராளுமன்றக் குழுவை அவமதிப்பதற்கு சமமாகும். 

மேலும், அண்மையில் வெளிவந்த ஊடக செய்திகளின் படி, மது வரித்திணைக்களத்தின் ஆணையாளர் மதுசார விலைகளை குறைப்பதற்கு மதுசார நிறுவனங்களிடம் கோரியுள்ளமை தெரிய வருகின்றது. 

நிலுவையாகவுள்ள பில்லியன் கணக்கான மதுசார வரியை செலுத்துவதற்கு தவறும் நிறுவனங்களிடமிருந்து அதனை அறவிட வேண்டியதே மதுவரித் திணைக்கள ஆணையாளரின் கடமை. மேலும் சரியான முறையில் வரி செலுத்தப்படாமல் சட்ட விரோதமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுசார வகைகளை அடையாளம் காண வேண்டியது மிக முக்கியமாகும்.

மேலும் இது போன்ற சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்பவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டியதும் முக்கியமானதொரு விடயமாகும். இது போன்ற சூழ்நிலையை தடுக்க வேண்டியது மதுவரித் திணைக்களத்தினதும், அத்திணைக்களத்தின் ஆணையாளரினதும் பொறுப்பாகும். 

மதுசார நிறுவனங்களிடம் விலையைக் குறைக்கக் கோருவது பொதுமக்களிடையே மதுசார பாவனையை அதிகரிப்பது மட்டுமன்றி நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இது போன்ற விடயங்கள் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். 

மதுசாரத்தினால் கிடைக்கப் பெறுகின்ற வருமானத்தை விடவும் அதனால் ஏற்படுகின்ற செலவீனம் அதிகமாகும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் மதுசாரத்தினால் கிடைக்கின்ற வரி வருமானத்தை விட மதுசார பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார செலவீனங்கள் அதிகமாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (ருNனுP) நடத்திய ஆய்வில், எமது நாட்டில் மதுசார பாவனையினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 237 பில்லியன் ரூபாய்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுசாரத்தினால் கிடைக்கப் பெற்ற வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் மாத்திரமே ஆகும். எமது நாட்டிற்கு, மதுசாரத்தினால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விடவும் செலவீணம் அதிகம் என்பதை இத்தரவு மேலும் உறுதிப்படுத்துகிறது.

மதுசார பாவனையால் ஏற்படுகின்ற நோய் நிலைமையை அதிகரிப்பது, குடும்ப சிதைவுகளை அதிகரிப்பது, மதுசார பாவனையினால் நாட்டிற்கு ஏற்படுகின்ற விளைவுகளை அதிகரிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரிப்பது, பிள்ளைகளின் மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தை குறைப்பது ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்வது மதுவரித் திணைக்கள ஆணையாளரின் கடமையல்ல.

சரியான முறையில் மதுசார வரியை அறவிட்டு சட்ட ரீதியற்ற முறையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுசார வகைகளை அடையாளம் கண்டு அவற்றை கட்டுப்படுத்துவதுமே உண்மையான கடமை என்பதை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்களிடையே மதுப் பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டு. மதுசார நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பிற்கேற்றவாறு மதுசார விலையைக் குறைத்து, மக்களின் மதுசார பாவனையை அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மதுவரி ஆணையாளரின் கடமை அல்ல எனவும் மதுசார நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய பில்லியன் கணக்கான வரியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதே உண்மையான கடமையாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சரியான முறையில் மதுசார வரியை அறவிடுவதற்கான பொறிமுறையொன்று இல்லாத காரணத்தினாலும், மதுசார நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் வரி அறவீட்டு முறைமை காணப்படுவதாலும் கடந்த 30.06.2024 வரை ரூபா 1.8 பில்லியன் வரி வருமானத்தை மதுவரித் திணைக்களம் இழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அதிகளவு நிலுவையில் உள்ள மது வரியை அறவிடக் கோறிய பாராளுமன்றக் குழு தலைவரின் பரிந்துரையை மதுவரித் திணைக்களம் நிராகரித்துள்ளது. இவ்வாறான நிலைமையானது மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் பாராளுமன்றக் குழுவை அவமதிப்பதற்கு சமமாகும். மேலும், அண்மையில் வெளிவந்த ஊடக செய்திகளின் படி, மது வரித்திணைக்களத்தின் ஆணையாளர் மதுசார விலைகளை குறைப்பதற்கு மதுசார நிறுவனங்களிடம் கோரியுள்ளமை தெரிய வருகின்றது. நிலுவையாகவுள்ள பில்லியன் கணக்கான மதுசார வரியை செலுத்துவதற்கு தவறும் நிறுவனங்களிடமிருந்து அதனை அறவிட வேண்டியதே மதுவரித் திணைக்கள ஆணையாளரின் கடமை. மேலும் சரியான முறையில் வரி செலுத்தப்படாமல் சட்ட விரோதமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுசார வகைகளை அடையாளம் காண வேண்டியது மிக முக்கியமாகும். மேலும் இது போன்ற சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்பவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டியதும் முக்கியமானதொரு விடயமாகும். இது போன்ற சூழ்நிலையை தடுக்க வேண்டியது மதுவரித் திணைக்களத்தினதும், அத்திணைக்களத்தின் ஆணையாளரினதும் பொறுப்பாகும். மதுசார நிறுவனங்களிடம் விலையைக் குறைக்கக் கோருவது பொதுமக்களிடையே மதுசார பாவனையை அதிகரிப்பது மட்டுமன்றி நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இது போன்ற விடயங்கள் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். மதுசாரத்தினால் கிடைக்கப் பெறுகின்ற வருமானத்தை விடவும் அதனால் ஏற்படுகின்ற செலவீனம் அதிகமாகும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் மதுசாரத்தினால் கிடைக்கின்ற வரி வருமானத்தை விட மதுசார பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார செலவீனங்கள் அதிகமாகும். கடந்த 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (ருNனுP) நடத்திய ஆய்வில், எமது நாட்டில் மதுசார பாவனையினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 237 பில்லியன் ரூபாய்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுசாரத்தினால் கிடைக்கப் பெற்ற வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் மாத்திரமே ஆகும். எமது நாட்டிற்கு, மதுசாரத்தினால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விடவும் செலவீணம் அதிகம் என்பதை இத்தரவு மேலும் உறுதிப்படுத்துகிறது.மதுசார பாவனையால் ஏற்படுகின்ற நோய் நிலைமையை அதிகரிப்பது, குடும்ப சிதைவுகளை அதிகரிப்பது, மதுசார பாவனையினால் நாட்டிற்கு ஏற்படுகின்ற விளைவுகளை அதிகரிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரிப்பது, பிள்ளைகளின் மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தை குறைப்பது ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்வது மதுவரித் திணைக்கள ஆணையாளரின் கடமையல்ல. சரியான முறையில் மதுசார வரியை அறவிட்டு சட்ட ரீதியற்ற முறையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுசார வகைகளை அடையாளம் கண்டு அவற்றை கட்டுப்படுத்துவதுமே உண்மையான கடமை என்பதை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement