• Mar 28 2024

தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டவரை மீண்டும் ஆளுநர் செயலகம் அழைக்க பிரயத்தனம்! samugammedia

Chithra / Jun 5th 2023, 10:28 pm
image

Advertisement

வட மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக இருந்த செல்வநாயகத்தை தற்போதைய ஆளுநர்  மீண்டும்  உதவிச் செயலாளராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கிறது.

தற்போதைய ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸின் முதலாவது ஆளுநர் பதவிக் காலத்தில் ஆளுநரின்  உதவிச் செயலாளராக செல்வநாயகம் கடமை ஆற்றினார்.

ஆளுநரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவதோடு ஆளுநரின் உதவிச் செயலாளராக   இலங்கை நிர்வாக சேவை தரம் III உடைய ஒருவரை நியமிக்க முடியும்.

ஆனால்  ஏற்கனவே ஆளுநரின் உதவிச் செயலாளராக கடமையாற்றிய செல்வநாயகம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி இல்லாத நிலையில் மாகாண  சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தராக உள்ளர்.

முன்னாள் வடமாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா காலத்தில் உதவிச் செயலாளராக இருந்த செல்வநாயகத்தை அவரது நியமனத்தை ஏற்க முடியாது என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ஆளுநர் செயலாளத்திலிருந்து மாகாண திட்டமிடல் கிளைக்கு  மாற்றினார்.

இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை  உரிய தரம் இல்லாத ஒருவரை மீண்டும் ஆளுநரின் உதவிச் செயலாளராக நியமிப்பதற்கு ஏன் முந்தி அடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஆளுநரின் உதவிச் செயலாளராக கடமை ஆற்றிய செல்வநாயகம் காலத்தில் ஆளுநர் செயலகத்துக்கு அனுப்பப்படும் கடிதங்கள் உரிய முறையில் பரிசிலிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்தமை குறிப்பிடத்தக்கது.


தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டவரை மீண்டும் ஆளுநர் செயலகம் அழைக்க பிரயத்தனம் samugammedia வட மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக இருந்த செல்வநாயகத்தை தற்போதைய ஆளுநர்  மீண்டும்  உதவிச் செயலாளராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கிறது.தற்போதைய ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸின் முதலாவது ஆளுநர் பதவிக் காலத்தில் ஆளுநரின்  உதவிச் செயலாளராக செல்வநாயகம் கடமை ஆற்றினார்.ஆளுநரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவதோடு ஆளுநரின் உதவிச் செயலாளராக   இலங்கை நிர்வாக சேவை தரம் III உடைய ஒருவரை நியமிக்க முடியும்.ஆனால்  ஏற்கனவே ஆளுநரின் உதவிச் செயலாளராக கடமையாற்றிய செல்வநாயகம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி இல்லாத நிலையில் மாகாண  சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தராக உள்ளர்.முன்னாள் வடமாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா காலத்தில் உதவிச் செயலாளராக இருந்த செல்வநாயகத்தை அவரது நியமனத்தை ஏற்க முடியாது என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ஆளுநர் செயலாளத்திலிருந்து மாகாண திட்டமிடல் கிளைக்கு  மாற்றினார்.இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை  உரிய தரம் இல்லாத ஒருவரை மீண்டும் ஆளுநரின் உதவிச் செயலாளராக நியமிப்பதற்கு ஏன் முந்தி அடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.ஆளுநரின் உதவிச் செயலாளராக கடமை ஆற்றிய செல்வநாயகம் காலத்தில் ஆளுநர் செயலகத்துக்கு அனுப்பப்படும் கடிதங்கள் உரிய முறையில் பரிசிலிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement