• Apr 24 2024

ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சிக்கு ஏகமனதாக எதிர்ப்பு - எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை samugammedia

Chithra / Jun 5th 2023, 10:36 pm
image

Advertisement

நாட்டின் ஜனநாயகத்திற்கு எஞ்சியுள்ள பரப்புகளையும் அழிக்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தை எதிர்க்கவும்,தோற்கடிக்கவும் எடுக்க முடியுமா எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நீதிமன்றத்திலும் எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியில் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற கட்சிக்கள் இன்று கூடியபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயக கட்டமைப்பில் நான்காவது தூணாக சுதந்திர ஊடகம் அமைவதாகவும், நிறைவேற்று, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை தடைகள் மற்றும் சமன்பாடுகள் பலப்படுத்தி ஜனநாயக கட்டமைப்பை பேணுவது போன்று நான்காவதாக தடைகள் மற்றும் சமன்பாடுகளை பேணுவதாக சுதந்திர ஊடகங்கள் அமைவதை உலகமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் இவ்வாறான ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலங்கள் மூலம் சுதந்திர ஊடகங்களை அழிக்கத் தயாராக உள்ளதாகவும், இப்போதும் முன்வைத்திருக்கும் இந்த சட்ட மூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும்,ஜனநாயகத்தை சீர்குழைக்கும்,குழிதோண்டி புதைக்கும், மக்களின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் சட்ட மூலம் எனவும், இச்சந்தர்ப்பத்தில் அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஒருதலைபட்சமான, கடுமையான மற்றும் முட்டாள்தனமான ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் சுதந்திர ஊடகங்களின் இருப்பை பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சிக்கு ஏகமனதாக எதிர்ப்பு - எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை samugammedia நாட்டின் ஜனநாயகத்திற்கு எஞ்சியுள்ள பரப்புகளையும் அழிக்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தை எதிர்க்கவும்,தோற்கடிக்கவும் எடுக்க முடியுமா எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நீதிமன்றத்திலும் எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியில் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற கட்சிக்கள் இன்று கூடியபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயக கட்டமைப்பில் நான்காவது தூணாக சுதந்திர ஊடகம் அமைவதாகவும், நிறைவேற்று, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை தடைகள் மற்றும் சமன்பாடுகள் பலப்படுத்தி ஜனநாயக கட்டமைப்பை பேணுவது போன்று நான்காவதாக தடைகள் மற்றும் சமன்பாடுகளை பேணுவதாக சுதந்திர ஊடகங்கள் அமைவதை உலகமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் இவ்வாறான ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலங்கள் மூலம் சுதந்திர ஊடகங்களை அழிக்கத் தயாராக உள்ளதாகவும், இப்போதும் முன்வைத்திருக்கும் இந்த சட்ட மூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது எனவும் தெரிவித்தார்.ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும்,ஜனநாயகத்தை சீர்குழைக்கும்,குழிதோண்டி புதைக்கும், மக்களின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் சட்ட மூலம் எனவும், இச்சந்தர்ப்பத்தில் அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த ஒருதலைபட்சமான, கடுமையான மற்றும் முட்டாள்தனமான ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் சுதந்திர ஊடகங்களின் இருப்பை பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement