நான் எனது கல்லூரிக்கு வெற்றிக்கேடயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு என சென். ஜோன்ஸ் அணித் தலைவர் எபநேசன் ஜெசாயேல் தெரிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் ஜெசாயேல் கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
தரம் 1இல் இருந்தே எனது தந்தையுடன் போட்டியை கண்டுகளிப்பதற்காக வருகை தருவேன். எனது தந்தை கடந்த 2021 இறந்து விட்டார். அவருடைய விருப்பம் BIGMATCH இல் எனது தலைமையில் கல்லூரிக்கு வெற்றிக் கேடயத்தினை கொண்டு வர வேண்டும் என்பது. அதை இன்று நான் நிறைவேற்றியிருக்கின்றேன். என்று நம்புகின்றேன்.
நாங்கள் எங்களுக்காகவோ, பயிற்றுனருக்காகவோ, அணிக்காவோ விளையாடவில்லை. எமது கல்லூரிக்காகவே விளையாடினோம்.
எமது கல்லூரிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்று எண்ணி அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் பல மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளோம். மத்திய கல்லூரி அணியும் என்றும் திறமையான அணி அவர்கள் எமக்கு போட்டியாக அமைந்திருந்தார்கள். 2021 அபிசேக். தலைமையிலான அணியிலும் நான் விளையாடினேன். அந்த வருடமும் வெற்றி பெற்றிருந்தோம். கடந்த வருடம் தோல்வி அடைந்தோம். திரும்பவும் இந்த வருடம் எமது கல்லூரிக்கு வெற்றி கேடயம் கொண்டு வந்திருக்கின்றோம். என்று தெரிவித்தார்.
எனது கல்லூரிக்கு வெற்றிக்கேடயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு - அணித் தலைவர் ஜெசாயேல் கருத்து. நான் எனது கல்லூரிக்கு வெற்றிக்கேடயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு என சென். ஜோன்ஸ் அணித் தலைவர் எபநேசன் ஜெசாயேல் தெரிவித்துள்ளார்.போட்டியின் பின்னர் இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் ஜெசாயேல் கருத்துத் தெரிவித்தார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.தரம் 1இல் இருந்தே எனது தந்தையுடன் போட்டியை கண்டுகளிப்பதற்காக வருகை தருவேன். எனது தந்தை கடந்த 2021 இறந்து விட்டார். அவருடைய விருப்பம் BIGMATCH இல் எனது தலைமையில் கல்லூரிக்கு வெற்றிக் கேடயத்தினை கொண்டு வர வேண்டும் என்பது. அதை இன்று நான் நிறைவேற்றியிருக்கின்றேன். என்று நம்புகின்றேன். நாங்கள் எங்களுக்காகவோ, பயிற்றுனருக்காகவோ, அணிக்காவோ விளையாடவில்லை. எமது கல்லூரிக்காகவே விளையாடினோம். எமது கல்லூரிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்று எண்ணி அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் பல மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளோம். மத்திய கல்லூரி அணியும் என்றும் திறமையான அணி அவர்கள் எமக்கு போட்டியாக அமைந்திருந்தார்கள். 2021 அபிசேக். தலைமையிலான அணியிலும் நான் விளையாடினேன். அந்த வருடமும் வெற்றி பெற்றிருந்தோம். கடந்த வருடம் தோல்வி அடைந்தோம். திரும்பவும் இந்த வருடம் எமது கல்லூரிக்கு வெற்றி கேடயம் கொண்டு வந்திருக்கின்றோம். என்று தெரிவித்தார்.