• Apr 28 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழரசுக் கட்சியை அதிலிருந்து வெளியேற்றியிருந்தனர் - சுமந்திரன் காட்டம்.!

Sharmi / Feb 6th 2023, 11:33 am
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தவர்கள் தமிழரசுக் கட்சி இல்லை என்றும் ஆனால் தமிழ் மக்கள் மக்கள் மத்தியில் பொய்யான விடயம் பரப்பப்படுவதாக தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடவேண்டுமென சில சிபாரிசுகளை செய்ததாகவும் ஆனால் அவை சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் கூறியபடி தேர்தலை எதிர்கொள்ள தயாரானபோது அதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டடைப்பிலுள்ள பங்காளி கட்சிகளே தம்மை வெளியேறச் சொன்னதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழரசுக் கட்சியை அதிலிருந்து வெளியேற்றியிருந்தனர் - சுமந்திரன் காட்டம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தவர்கள் தமிழரசுக் கட்சி இல்லை என்றும் ஆனால் தமிழ் மக்கள் மக்கள் மத்தியில் பொய்யான விடயம் பரப்பப்படுவதாக தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடவேண்டுமென சில சிபாரிசுகளை செய்ததாகவும் ஆனால் அவை சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அவர்கள் கூறியபடி தேர்தலை எதிர்கொள்ள தயாரானபோது அதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் தேசிய கூட்டடைப்பிலுள்ள பங்காளி கட்சிகளே தம்மை வெளியேறச் சொன்னதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement