• Mar 29 2024

அதிகாலையில் பரிதாபம்...!கோர விபத்தில் சிக்கி பிரபல நடிகர் உயிரிழப்பு...! ரசிகர்கள் அதிர்ச்சி..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 11:37 am
image

Advertisement

திரையுலகம் இந்தவருடம் பல முக்கிய பிரபலங்களின் திடீர் மறைவுகளால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் மற்றுமொரு நடிகரின் இழப்பு சம்பவம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று(06)அதிகாலை 4:30 மணியளவில் திருச்சூர் கைப்பமங்கலம் என்ற இடத்தில் நடந்த வாகன விபத்தில் நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி பரிதாபமாக உயிரிழந்தார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோருடன் வடகரையில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் கொல்லம் சுதி.

அவ்வேளை கார், எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை மீட்டு கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்லம் சுதி கடந்த 2015ம் ஆண்டு வெளியான கந்தாரி படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

கட்டப்பனாவில் ஹிரித்திக் ரோஷன், குட்டநாடனில் மார்பப்பா,  கேசு ஈ வீடிண்டே நாதன், எஸ்கேப் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொல்லம் சுதியின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



அதிகாலையில் பரிதாபம்.கோர விபத்தில் சிக்கி பிரபல நடிகர் உயிரிழப்பு. ரசிகர்கள் அதிர்ச்சி.samugammedia திரையுலகம் இந்தவருடம் பல முக்கிய பிரபலங்களின் திடீர் மறைவுகளால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் மற்றுமொரு நடிகரின் இழப்பு சம்பவம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்று(06)அதிகாலை 4:30 மணியளவில் திருச்சூர் கைப்பமங்கலம் என்ற இடத்தில் நடந்த வாகன விபத்தில் நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி பரிதாபமாக உயிரிழந்தார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோருடன் வடகரையில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் கொல்லம் சுதி. அவ்வேளை கார், எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை மீட்டு கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லம் சுதி கடந்த 2015ம் ஆண்டு வெளியான கந்தாரி படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.கட்டப்பனாவில் ஹிரித்திக் ரோஷன், குட்டநாடனில் மார்பப்பா,  கேசு ஈ வீடிண்டே நாதன், எஸ்கேப் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கொல்லம் சுதியின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement