• May 18 2024

வெறும் காய்ச்சல் தான்... இரண்டு கால்களையும் இழக்க நேர்ந்த இளைஞன்!

Tamil nila / Jan 24th 2023, 7:28 am
image

Advertisement

பிரிட்டனின் வில்லிங்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது இரு கால்களையும் இழக்கும் மோசமான நிலையில் உள்ளார்.


வில்லிங்டன் பகுதியை சேர்ந்த 20 வயதான லெவி டீவி என்பவரே தமது 21வது பிறந்த நாளுக்கு 2 தினங்களுக்கு முன்பு முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கிறார்.


முதலில் வெறும் காய்ச்சல் என்றே மருத்துவமனையை நாடியுள்ளார் லெவி டீவி. ஆனால் அதன் பின்னர் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதுடன், இது பின்னர் செப்சிஸுக்கு வழிவகுத்தது.


உயிர் தப்ப 30% வாய்ப்பே இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், ஜனவரி 24ம் திகதி அவரது கால்கள் இரண்டையும் அறுவை சிகிச்சையால் அகற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


துடிப்பான, கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞரான லெவி டீவி, கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் திகதி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவரை நாடியுள்ளார்.


ஆனால் அதன் பின்னர் அவரது நிலை தீவிரமடைந்ததுடன், உடல் உறுப்புகள் சேதமடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 14 நாட்கள் கோமாவிலும் 20 நாட்கள் ECMA விலும் இருந்துள்ளார். 31 நாட்களுக்கு பின்னர்  உடல் நிலை தேறியதை அடுத்து செயற்கை சுவாசத்தை நிறுத்தினர்.



ஜனவரி 9ம் திகதி மீண்டும் ராயல் டெர்பி மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் மருத்துவர்கள் அந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.


அவரது கால்கள் இரண்டும் முட்டிக்கு கீழே துண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர். தற்போது, அவரது சிகிச்சை மற்றும் மீண்டும் நடக்க வைப்பதற்கான செலவுகளுக்காக மக்களிடம் இருந்து நிதி திரட்ட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுவரை 47,000 பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வெறும் காய்ச்சல் தான். இரண்டு கால்களையும் இழக்க நேர்ந்த இளைஞன் பிரிட்டனின் வில்லிங்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது இரு கால்களையும் இழக்கும் மோசமான நிலையில் உள்ளார்.வில்லிங்டன் பகுதியை சேர்ந்த 20 வயதான லெவி டீவி என்பவரே தமது 21வது பிறந்த நாளுக்கு 2 தினங்களுக்கு முன்பு முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கிறார்.முதலில் வெறும் காய்ச்சல் என்றே மருத்துவமனையை நாடியுள்ளார் லெவி டீவி. ஆனால் அதன் பின்னர் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதுடன், இது பின்னர் செப்சிஸுக்கு வழிவகுத்தது.உயிர் தப்ப 30% வாய்ப்பே இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், ஜனவரி 24ம் திகதி அவரது கால்கள் இரண்டையும் அறுவை சிகிச்சையால் அகற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.துடிப்பான, கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞரான லெவி டீவி, கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் திகதி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவரை நாடியுள்ளார்.ஆனால் அதன் பின்னர் அவரது நிலை தீவிரமடைந்ததுடன், உடல் உறுப்புகள் சேதமடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 14 நாட்கள் கோமாவிலும் 20 நாட்கள் ECMA விலும் இருந்துள்ளார். 31 நாட்களுக்கு பின்னர்  உடல் நிலை தேறியதை அடுத்து செயற்கை சுவாசத்தை நிறுத்தினர்.ஜனவரி 9ம் திகதி மீண்டும் ராயல் டெர்பி மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர் மருத்துவர்கள் அந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.அவரது கால்கள் இரண்டும் முட்டிக்கு கீழே துண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர். தற்போது, அவரது சிகிச்சை மற்றும் மீண்டும் நடக்க வைப்பதற்கான செலவுகளுக்காக மக்களிடம் இருந்து நிதி திரட்ட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுவரை 47,000 பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement