• Nov 26 2024

யாழ். மாவட்டத்தில் முககவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர்

Tharmini / Nov 21st 2024, 1:21 pm
image

யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக முககவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிசார் சிசிடி கமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

கோப்பாய் ,யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளையில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்தவரே,

இவ்வாறு சி.சி.டி.வி கமராவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த நபர் இரவு 1 மணி தொடக்கம் 3மணி இடைவெளியில் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும், 

இதுவரையான காலப்பகுதியில் 8 வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்,

எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த வாரமளவில் யாழ். செட்டிதெரு வீதியிலும் திருட்டு சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வங்கி , நிதிநிறுவனங்கள் ,கம்பெனிகளில் பணிபுரிவோர் மற்றும் வைத்தியர்களின் வீடுகளிலேயே  இவ்வாறு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறும் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ். மாவட்டத்தில் முககவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக முககவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிசார் சிசிடி கமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.கோப்பாய் ,யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளையில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்தவரே, இவ்வாறு சி.சி.டி.வி கமராவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் இரவு 1 மணி தொடக்கம் 3மணி இடைவெளியில் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும், இதுவரையான காலப்பகுதியில் 8 வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், கடந்த வாரமளவில் யாழ். செட்டிதெரு வீதியிலும் திருட்டு சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இங்கு வங்கி , நிதிநிறுவனங்கள் ,கம்பெனிகளில் பணிபுரிவோர் மற்றும் வைத்தியர்களின் வீடுகளிலேயே  இவ்வாறு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.எனவே பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறும் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement