• May 17 2024

யாழ்- கொழும்பு ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பம்..!samugammedia

Sharmi / Jul 15th 2023, 9:53 am
image

Advertisement

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்துஇ அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் (13) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதலாம் கட்டமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் வழித்தட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் முன்னதாக நாளாந்தம் 5 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை 3 சேவைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அத்தியட்சகர் ரி. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கல்கிஸையிலிருந்து அதிகாலை 5.10க்கு பயணத்தை ஆரம்பிக்கும் சேவையும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15க்கு புறப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சேவைகளை, ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய நிதியுதவியின் கீழ்  அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து- யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ்- கொழும்பு ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பம்.samugammedia யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்துஇ அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் (13) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை முதலாம் கட்டமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் வழித்தட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் முன்னதாக நாளாந்தம் 5 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை 3 சேவைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அத்தியட்சகர் ரி. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.இதன்படி, கல்கிஸையிலிருந்து அதிகாலை 5.10க்கு பயணத்தை ஆரம்பிக்கும் சேவையும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15க்கு புறப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.இந்தச் சேவைகளை, ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்திய நிதியுதவியின் கீழ்  அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து- யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement