• May 18 2024

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Jul 15th 2023, 9:56 am
image

Advertisement

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களுக்கான இறக்குமதித் தடைகள் முன்பு போலவே அமுலில் உள்ளன.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், அதை ஒரு மூலோபாய திட்டத்தின்படி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கத்தின் கவனம் குவிந்துள்ளது.

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களுக்கான இறக்குமதித் தடைகள் முன்பு போலவே அமுலில் உள்ளன.இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை இரண்டு கட்டங்களாக செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், அதை ஒரு மூலோபாய திட்டத்தின்படி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.முதலாவதாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கத்தின் கவனம் குவிந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement