• Sep 17 2024

யாழ்.பண்ணைப் பகுதி நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்; நாளை நீதிமன்றில்...!samugammedia

Sharmi / May 3rd 2023, 9:43 am
image

Advertisement

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  நாகபூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு நாளை(04) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


சித்திரைப் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும் , மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற யாழ்ப்பாண  காவல் துறையினா் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் கடந்த (18)ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கடந்த18ம் திகதி  சிலை தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட து.இந்நிநிலையில் குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும், மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில்  பண்ணை சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  நாகபூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு நாளை(04) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






யாழ்.பண்ணைப் பகுதி நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்; நாளை நீதிமன்றில்.samugammedia யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  நாகபூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு நாளை(04) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சித்திரைப் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும் , மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற யாழ்ப்பாண  காவல் துறையினா் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.இந்நிலையில் இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் கடந்த (18)ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டது.அதன் பிரகாரம் கடந்த18ம் திகதி  சிலை தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட து.இந்நிநிலையில் குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும், மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.இவ்வாறானதொரு நிலையில்  பண்ணை சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  நாகபூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு நாளை(04) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement