• May 11 2024

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' இன்று திறந்துவைப்பு!samugammedia

Sharmi / Apr 8th 2023, 10:51 am
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில்,  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று இன்று(08) காலை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அம்முயற்சியின் முதல்படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' இன்று திறந்துவைப்புsamugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில்,  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று இன்று(08) காலை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அம்முயற்சியின் முதல்படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement