• Apr 28 2024

உக்ரைன் குழந்தைகளிற்கு 9 கோடி-13 வயது சிறுவனின் புதிய பயணம்!samugammedia

Sharmi / Apr 8th 2023, 10:30 am
image

Advertisement

அண்மையில் உக்ரேனிய குழந்தைகளிற்காக  250,000 யூரோக்கள் திரட்டி வைரலான 13 வயது சிறுவன் கிழக்கு ஆபிரிக்காவின் குழந்தைகளுக்கு உதவ புதிய நிதி திரட்டலை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கேப்ரியல் கிளார்க் என்ற 13 வயது சிறுவனே  கடந்த ஆண்டு “Bowl for Ukraine” என்ற பெயரில் எடுத்த முயற்சி மூலம் இணையத்தில் வைரலானான்.

அதில், கிளார்க் ஒரு மரக் கிண்ணத்தை செதுக்கி, அதில் உக்ரேனியக் கொடியின் வண்ணங்கள் பொறித்து  ஏலத்தில் விட்டார்.



அதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்) திரட்டினார்.

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கும்ப்ரியா என்ற நகரத்தில் வசிக்கும் இவர்  இந்த ஆண்டும்  அதே சாதனையை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, ‘The Hope Bowl’ என்ற மற்றொரு கிண்ணத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.



புதிய முயற்சியின் மூலம் உலகம் முழுவதும், குறிப்பாக கிழக்கு ஆபிரிக்காவில் போராடி வரும் குழந்தைகளுக்கு ஆதரவாக அவசர நிதியத்திற்காக பணத்தை திரட்ட கிளார்க் திட்டமிட்டுள்ளதுடன் அதற்காக புதிய கிண்ணத்தை உருவாக்க 10 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

கிளார்க் தனது கடைசி நிதி திரட்டலின் மூலம் உண்டான வெற்றியாலும், போலந்தில் உள்ள ஒரு பாடசாலையிலுள்ள குழந்தைகளுக்கு அது உதவியது என்பதுமே இந்த முயற்சியினை எடுக்க காரணம் என கூறப்பட்டுள்ளது.

போலந்து பாடசாலையானது  உக்ரைனிலிருந்து 6-17 வயதிற்குட்பட்ட 450 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி போலந்து மொழி பாடங்களுடன் உக்ரேனிய பாடத்திட்டத்தை அவர்களின் சொந்த மொழியில் கற்பதற்கும் உதவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உக்ரைன் குழந்தைகளிற்கு 9 கோடி-13 வயது சிறுவனின் புதிய பயணம்samugammedia அண்மையில் உக்ரேனிய குழந்தைகளிற்காக  250,000 யூரோக்கள் திரட்டி வைரலான 13 வயது சிறுவன் கிழக்கு ஆபிரிக்காவின் குழந்தைகளுக்கு உதவ புதிய நிதி திரட்டலை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேப்ரியல் கிளார்க் என்ற 13 வயது சிறுவனே  கடந்த ஆண்டு “Bowl for Ukraine” என்ற பெயரில் எடுத்த முயற்சி மூலம் இணையத்தில் வைரலானான். அதில், கிளார்க் ஒரு மரக் கிண்ணத்தை செதுக்கி, அதில் உக்ரேனியக் கொடியின் வண்ணங்கள் பொறித்து  ஏலத்தில் விட்டார்.அதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்) திரட்டினார்.வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கும்ப்ரியா என்ற நகரத்தில் வசிக்கும் இவர்  இந்த ஆண்டும்  அதே சாதனையை செய்ய திட்டமிட்டுள்ளார்.இந்த ஆண்டு, ‘The Hope Bowl’ என்ற மற்றொரு கிண்ணத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். புதிய முயற்சியின் மூலம் உலகம் முழுவதும், குறிப்பாக கிழக்கு ஆபிரிக்காவில் போராடி வரும் குழந்தைகளுக்கு ஆதரவாக அவசர நிதியத்திற்காக பணத்தை திரட்ட கிளார்க் திட்டமிட்டுள்ளதுடன் அதற்காக புதிய கிண்ணத்தை உருவாக்க 10 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது. கிளார்க் தனது கடைசி நிதி திரட்டலின் மூலம் உண்டான வெற்றியாலும், போலந்தில் உள்ள ஒரு பாடசாலையிலுள்ள குழந்தைகளுக்கு அது உதவியது என்பதுமே இந்த முயற்சியினை எடுக்க காரணம் என கூறப்பட்டுள்ளது. போலந்து பாடசாலையானது  உக்ரைனிலிருந்து 6-17 வயதிற்குட்பட்ட 450 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி போலந்து மொழி பாடங்களுடன் உக்ரேனிய பாடத்திட்டத்தை அவர்களின் சொந்த மொழியில் கற்பதற்கும் உதவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement