• Feb 20 2025

யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் துபாய்க்கு தப்ப முயற்சி - கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

Chithra / Feb 17th 2025, 7:47 am
image

 

ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.4 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, ​​பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் துபாய்க்கு தப்ப முயற்சி - கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது  ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.4 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, ​​பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement