யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்கு நிலையில் இல்லை எனவும் அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்திற்கு செயலாளர் என்று எவரும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவருடைய கல்வியாண்டு பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகவே தலைவர் ,செயலாளர். இல்லாமல் எவ்வாறு ஒன்றியம் இயங்க முடியும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு நிறைவேற்ற அதிகாரமிக்க தலைவர் செயலாளரும் நியமிக்கப்படுமாக இருந்தால் அது பீடங்களினுடைய மாணவர் ஒன்றியங்களில் இருந்து தான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.
தற்போது செயலாளராக தன்னை வெளிப்படுத்தும் நபருடைய நியமனமானது சட்ட விரோதம் என்ற அடிப்படையில் எங்கள் முறைப்பாட்டினை துணைவேந்தருக்கு மாணவர் நலச் சேவை பிரிவுக்கும் முன்வைத்துள்ளோம்.
முன்னர் இருந்த மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை வறிதாகியிருந்தது. அதன் பின்னர் தற்போதுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டார். அதில் எமக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
குறிப்பிட்ட திகதியில் முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினுடைய தலைவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எந்தவித கல்வி ரீதியான அவர் செயல்பாட்டிலும் ஈடுபட முடியாது. ஆகவே ஒரு தலைவர் வகுப்பு தடையில் இருந்த நிலையில் எவ்வாறு அந்த பீடம் ஒரு முடிவினை எடுத்து மாணவர் நல சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கமுடியும். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் கலைப்பீட மாணவர் ஒன்றிய சிரேஷ்ட பொருளாளர் ஊடாகவும் பீடாதிபதி ஊடாகவும் மாணவர் நல சேவை கிளைக்கு அனுப்பவேண்டும். ஆனால் அதனை விசாரித்த போது அவ்வாறான கடிதத்தை அனுப்பவில்லை என்றும் நியமனத்தை அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தங்கள் விருப்புகளை காட்டுவதற்காக ஒரு சிலருடைய திட்டமிடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவரது நியமனம் ஒரு சட்டமுறையற்ற நியமனம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு சொல்ல வேண்டும் என மூன்று, நான்கு கடிதங்களை அனுப்பி இருந்த போதும் எவ்வித பதிலும் தரப்படவில்லை.
செயலாளருடைய கையெழுத்துக்கள் இல்லாத கடிதங்கள் செல்லுபடியற்றது. மாணவர் ஒன்றியங்களைப் பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் செயலாளரிடம் இருக்கின்றது. செயலாளரின் பதவி வறிதானால் உச்சபட்சமாக அதிகாரம் உள்ள நபர் கூட்டத்தை கூட்ட முடியும். தற்போது நடைபெறுகிறது சம்பவத்தின் படி செயலாளரில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒன்றிய தலைவரின் பதவி வறிதாகி இருக்கின்றது. மூன்று நான்கு மாதங்களாக செயலாளரில்லை.
கலைப்பீட மாணவர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு என்னுடையது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கண்காணிக்கின்ற அதிகாரம் குறித்தவொரு கட்டமைப்பு இருக்கிறது.
இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி களைத்துப் போய்விட்டோம். கலைப்பீடத்திற்கு வர வேண்டிய ஒரு சிறப்புரிமையை கேட்டு அலுத்து போய் விட்டோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் இயங்குநிலையில் இல்லாத நிலையில், அதன் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை இயக்குபவர்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்போது இயங்கு நிலையில் இல்லை; கலைப்பீட மாணவர்கள் சுட்டிக்காட்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்கு நிலையில் இல்லை எனவும் அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்திற்கு செயலாளர் என்று எவரும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவருடைய கல்வியாண்டு பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகவே தலைவர் ,செயலாளர். இல்லாமல் எவ்வாறு ஒன்றியம் இயங்க முடியும்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு நிறைவேற்ற அதிகாரமிக்க தலைவர் செயலாளரும் நியமிக்கப்படுமாக இருந்தால் அது பீடங்களினுடைய மாணவர் ஒன்றியங்களில் இருந்து தான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.தற்போது செயலாளராக தன்னை வெளிப்படுத்தும் நபருடைய நியமனமானது சட்ட விரோதம் என்ற அடிப்படையில் எங்கள் முறைப்பாட்டினை துணைவேந்தருக்கு மாணவர் நலச் சேவை பிரிவுக்கும் முன்வைத்துள்ளோம்.முன்னர் இருந்த மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை வறிதாகியிருந்தது. அதன் பின்னர் தற்போதுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டார். அதில் எமக்கு ஒரு சந்தேகம் இருந்தது.குறிப்பிட்ட திகதியில் முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினுடைய தலைவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. எந்தவித கல்வி ரீதியான அவர் செயல்பாட்டிலும் ஈடுபட முடியாது. ஆகவே ஒரு தலைவர் வகுப்பு தடையில் இருந்த நிலையில் எவ்வாறு அந்த பீடம் ஒரு முடிவினை எடுத்து மாணவர் நல சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கமுடியும். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் கலைப்பீட மாணவர் ஒன்றிய சிரேஷ்ட பொருளாளர் ஊடாகவும் பீடாதிபதி ஊடாகவும் மாணவர் நல சேவை கிளைக்கு அனுப்பவேண்டும். ஆனால் அதனை விசாரித்த போது அவ்வாறான கடிதத்தை அனுப்பவில்லை என்றும் நியமனத்தை அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.தங்கள் விருப்புகளை காட்டுவதற்காக ஒரு சிலருடைய திட்டமிடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவரது நியமனம் ஒரு சட்டமுறையற்ற நியமனம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு சொல்ல வேண்டும் என மூன்று, நான்கு கடிதங்களை அனுப்பி இருந்த போதும் எவ்வித பதிலும் தரப்படவில்லை.செயலாளருடைய கையெழுத்துக்கள் இல்லாத கடிதங்கள் செல்லுபடியற்றது. மாணவர் ஒன்றியங்களைப் பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் செயலாளரிடம் இருக்கின்றது. செயலாளரின் பதவி வறிதானால் உச்சபட்சமாக அதிகாரம் உள்ள நபர் கூட்டத்தை கூட்ட முடியும். தற்போது நடைபெறுகிறது சம்பவத்தின் படி செயலாளரில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒன்றிய தலைவரின் பதவி வறிதாகி இருக்கின்றது. மூன்று நான்கு மாதங்களாக செயலாளரில்லை.கலைப்பீட மாணவர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு என்னுடையது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கண்காணிக்கின்ற அதிகாரம் குறித்தவொரு கட்டமைப்பு இருக்கிறது.இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி களைத்துப் போய்விட்டோம். கலைப்பீடத்திற்கு வர வேண்டிய ஒரு சிறப்புரிமையை கேட்டு அலுத்து போய் விட்டோம்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் இயங்குநிலையில் இல்லாத நிலையில், அதன் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை இயக்குபவர்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.