• May 19 2024

சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் யாழ். வந்தடைந்த முதலாவது பாரிய சொகுசு கப்பல்.! samugammedia

Chithra / Jun 16th 2023, 8:51 am
image

Advertisement

இந்தியா - சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.

சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார்.

தமிழகம் - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

தமிழகத்தில் இருந்து வருகை தந்த விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா, 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற துறைமுக முனையத்தையும் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், கப்பற்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ். அரச அதிபர், மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் யாழ். வந்தடைந்த முதலாவது பாரிய சொகுசு கப்பல். samugammedia இந்தியா - சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார்.தமிழகம் - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.தமிழகத்தில் இருந்து வருகை தந்த விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா, 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற துறைமுக முனையத்தையும் திறந்து வைத்தார்.குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், கப்பற்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ். அரச அதிபர், மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement