• Jun 26 2024

இலங்கை வரும் ஜெய்சங்கர்- சம்பந்தனுடன் முக்கிய பேச்சு!

Tamil nila / Jun 16th 2024, 8:28 pm
image

Advertisement

இந்தியாவில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

மேற்படி சந்திப்புக்களின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வரும் ஜெய்சங்கர்- சம்பந்தனுடன் முக்கிய பேச்சு இந்தியாவில் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.மேற்படி சந்திப்புக்களின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement