இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீருமான சனத் ஜயசூரிய இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
உபுல் தரங்க தலைமையிலான புதெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய தெரிவுக்குழு நியமிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக கூறி சர்வதேச கிரிக்கெட் பேரவையும் இலங்கை கிரிக்கெட் மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் உயர்மட்ட ஆலோசகராக ஜயசூரிய நியமனம் samugammedia இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீருமான சனத் ஜயசூரிய இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.உபுல் தரங்க தலைமையிலான புதெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய தெரிவுக்குழு நியமிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது.இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக கூறி சர்வதேச கிரிக்கெட் பேரவையும் இலங்கை கிரிக்கெட் மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.