குளியாபிட்டிய - ஹெட்டிபொல பிரதான வீதியில் கம்புரபொல புஜ்கமுவ பாலத்திலிருந்து சொகுசு ஜீப் வண்டி ஒன்று , ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்தனர்.
ஓடையில் விழுந்த ஜீப் வண்டியை கிரேன் உதவியுடன் மேலே இழுத்ததாகவும், அதேவேளை ஜீப் வண்டிக்குள் சிக்கிய இரு இளைஞர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும், தற்போதைய விசாரணைகளின் படி ஜீப் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் கவிழ்ந்த ஜீப் வண்டி; இரு சகோதரர்கள் பரிதாப மரணம். குளியாபிட்டிய - ஹெட்டிபொல பிரதான வீதியில் கம்புரபொல புஜ்கமுவ பாலத்திலிருந்து சொகுசு ஜீப் வண்டி ஒன்று , ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்தனர்.ஓடையில் விழுந்த ஜீப் வண்டியை கிரேன் உதவியுடன் மேலே இழுத்ததாகவும், அதேவேளை ஜீப் வண்டிக்குள் சிக்கிய இரு இளைஞர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இவ்விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும், தற்போதைய விசாரணைகளின் படி ஜீப் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.