• Apr 28 2024

ஜெரோம் பெர்னாண்டோ – ஒரு வார விரிவுரைக்கு 1.5 மில்லியனுக்கும் மேல் வருமானம்! அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jul 12th 2023, 1:16 pm
image

Advertisement

இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் கடவுளின் ஆசீர்வாத நிகழ்ச்சியை ஆன்லைனில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விரிவுரையானது ஆன்லைனில் நடத்தப்படுவதுடன், இலங்கையில் உள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வரவு வைத்து வர்த்தகர்கள் இந்த விரிவுரையில் இணைந்து கொள்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விரிவுரையின் மூலம் மாத்திரம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்த விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் பழையபடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க ‘மிரக்கிள் டோம்’ மண்டபத்தில் விரிவுரை ஆற்றிய 04 ஏக்கர் காணியின் உரிமையாளரிடமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான இவர், தேவாலயம் கட்டுவதற்காக காணியை தானமாக வழங்கியதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் அமைப்பதற்காக 9 கோடி ரூபாவுக்கு வாங்கிய இந்த காணி 2015ஆம் ஆண்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவர் ஒருவருக்கு 19,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பணத்தில் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலையை வெளிநாட்டவருக்கு விற்றாலும், தொழிற்சாலை அமைந்துள்ள நிலம் இந்த தொழிலதிபருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மாதாந்தம் 110 இலட்சம் வாடகையாகப் பெறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று அந்த பாடசாலைக்கு பல கோடி செலவில் நீச்சல் தடாகம் கூட கட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெரோமினை பின்தொடர்பவர்களில் இதுபோன்ற பல தொழிலதிபர்கள் இருப்பதாகவும் அவர்களில் இந்த நாட்டில் உள்ள பிரபல கார் டீலர்ஷிப் ஒன்றின் உரிமையாளர்களும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஜெரோமின் சீடர்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஜெரோம் பெர்னாண்டோ – ஒரு வார விரிவுரைக்கு 1.5 மில்லியனுக்கும் மேல் வருமானம் அதிர்ச்சி தகவல் samugammedia இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் கடவுளின் ஆசீர்வாத நிகழ்ச்சியை ஆன்லைனில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த விரிவுரையானது ஆன்லைனில் நடத்தப்படுவதுடன், இலங்கையில் உள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வரவு வைத்து வர்த்தகர்கள் இந்த விரிவுரையில் இணைந்து கொள்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.இந்த விரிவுரையின் மூலம் மாத்திரம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்த விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் பழையபடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க ‘மிரக்கிள் டோம்’ மண்டபத்தில் விரிவுரை ஆற்றிய 04 ஏக்கர் காணியின் உரிமையாளரிடமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.முன்னாள் பொலிஸ் அதிகாரியான இவர், தேவாலயம் கட்டுவதற்காக காணியை தானமாக வழங்கியதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தெரிவித்துள்ளார்.ஹோட்டல் அமைப்பதற்காக 9 கோடி ரூபாவுக்கு வாங்கிய இந்த காணி 2015ஆம் ஆண்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவர் ஒருவருக்கு 19,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த பணத்தில் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொழிற்சாலையை வெளிநாட்டவருக்கு விற்றாலும், தொழிற்சாலை அமைந்துள்ள நிலம் இந்த தொழிலதிபருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர் மாதாந்தம் 110 இலட்சம் வாடகையாகப் பெறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் இவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று அந்த பாடசாலைக்கு பல கோடி செலவில் நீச்சல் தடாகம் கூட கட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.ஜெரோமினை பின்தொடர்பவர்களில் இதுபோன்ற பல தொழிலதிபர்கள் இருப்பதாகவும் அவர்களில் இந்த நாட்டில் உள்ள பிரபல கார் டீலர்ஷிப் ஒன்றின் உரிமையாளர்களும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஜெரோமின் சீடர்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement