• May 04 2024

யாழில் பாடசாலை மாணவிகளுடன் சேட்டை..! தட்டிக்கேட்ட மாணவன் மீது தாக்குதல்..!samugammedia

Sharmi / May 31st 2023, 8:11 pm
image

Advertisement

வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் க.பொ.சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று மதியம்  நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு இ வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் இ பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நின்ற இரு இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பரீட்சை எழுதி விட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செய்யப்பட்ட போது இ இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு அவ்விடத்தை இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து இ விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன் இ அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழில் பாடசாலை மாணவிகளுடன் சேட்டை. தட்டிக்கேட்ட மாணவன் மீது தாக்குதல்.samugammedia வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் க.பொ.சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் இன்று மதியம்  நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு இ வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் இ பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நின்ற இரு இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பரீட்சை எழுதி விட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செய்யப்பட்ட போது இ இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு அவ்விடத்தை இருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து இ விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன் இ அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement