• May 20 2024

தனித்து ஆட்சி அமைக்க மக்களிடம் ஆணை கோரும் ஜே.வி.பி! samugammedia

Tamil nila / Mar 31st 2023, 10:05 am
image

Advertisement

"ஊழல் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவே எம்மைத் தனி அரசாக நியமிக்குமாறு மக்களிடம் கேட்கின்றோம்."


- இவ்வாறு ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.


'உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றால் தனி அரசை உங்களால் அமைக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"நாம் மக்களிடம் மீண்டும் மீண்டும் கேட்பது எம்மைத் தனி அரசாக நியமிக்குமாறுதான். சலுகைகள் கொடுத்து - இலஞ்சம் கொடுத்து ஆட்களை எம்முடன் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கு நாம் தயாரில்லை.


எங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் ஊழல் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பார்கள். இதனால் நாம் தனி அரசை மக்களிடம் கேட்கின்றோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.


உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால் அது முடிந்து நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும்." - என்றார்.

தனித்து ஆட்சி அமைக்க மக்களிடம் ஆணை கோரும் ஜே.வி.பி samugammedia "ஊழல் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவே எம்மைத் தனி அரசாக நியமிக்குமாறு மக்களிடம் கேட்கின்றோம்."- இவ்வாறு ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.'உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றால் தனி அரசை உங்களால் அமைக்க முடியுமா' என்ற கேள்விக்கு ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"நாம் மக்களிடம் மீண்டும் மீண்டும் கேட்பது எம்மைத் தனி அரசாக நியமிக்குமாறுதான். சலுகைகள் கொடுத்து - இலஞ்சம் கொடுத்து ஆட்களை எம்முடன் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கு நாம் தயாரில்லை.எங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் ஊழல் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பார்கள். இதனால் நாம் தனி அரசை மக்களிடம் கேட்கின்றோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால் அது முடிந்து நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement