நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18.03.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்டினடுக்கப்பட்டுள்ளதனால் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்டோர் சேவையிலீடுபடுகின்ற போதிலும் மருந்தாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடமைக்குச் சமூகம் கொடுக்காதினால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
எனினும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நலன்கருத்தி வைத்தியசாலை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் வேலைநிறுத்தம்: நோயாளர்கள் அவதி நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18.03.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்டினடுக்கப்பட்டுள்ளதனால் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்டோர் சேவையிலீடுபடுகின்ற போதிலும் மருந்தாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடமைக்குச் சமூகம் கொடுக்காதினால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.எனினும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நலன்கருத்தி வைத்தியசாலை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.