• May 17 2024

18 ஆண்டுகளுக்கு பின் கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்?

Tamil nila / Feb 5th 2023, 3:52 pm
image

Advertisement

ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படமும், கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன்-2' படமும் 2023-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.   


தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களாக கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு தான் உயர்ந்துகொண்டே இருக்கின்றது. 


தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் மோதியிருப்பதை இந்த தலைமுறையினர் கண்டுகளித்துள்ளனர். இப்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் மூத்த நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதலை ஏற்படுத்தவுள்ளதை இந்த தலைமுறையினர் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கமல் மற்றும் ரஜினி படங்கள் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்களின்படி, ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படமும், கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன்-2' படமும் 2023-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் படங்கள் ஒன்றாக மோதிக்கொள்வது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொண்டது. 


ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'சந்திரமுகி' படமும், கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியிடப்பட்டது. 'சந்திரமுகி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பெற்று ரஜினியின் திரை பயணத்தில் சிறந்த படமாக அமைந்திருந்தது. ஆனால் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படம் கமல் திரை வாழ்க்கையில் மோசமான படமாக அமைந்தது. 



ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த இரண்டு படங்களுக்கும் அனிரூத் தான் இசையமைக்கிறார்.

18 ஆண்டுகளுக்கு பின் கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படமும், கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன்-2' படமும் 2023-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களாக கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு தான் உயர்ந்துகொண்டே இருக்கின்றது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் மோதியிருப்பதை இந்த தலைமுறையினர் கண்டுகளித்துள்ளனர். இப்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் மூத்த நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதலை ஏற்படுத்தவுள்ளதை இந்த தலைமுறையினர் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கமல் மற்றும் ரஜினி படங்கள் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்களின்படி, ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படமும், கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன்-2' படமும் 2023-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் படங்கள் ஒன்றாக மோதிக்கொள்வது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொண்டது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'சந்திரமுகி' படமும், கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியிடப்பட்டது. 'சந்திரமுகி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பெற்று ரஜினியின் திரை பயணத்தில் சிறந்த படமாக அமைந்திருந்தது. ஆனால் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படம் கமல் திரை வாழ்க்கையில் மோசமான படமாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த இரண்டு படங்களுக்கும் அனிரூத் தான் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement