• Nov 28 2024

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் கனகேஸ்வரன்...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 11:16 am
image

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்றையதினம் காலை (23)  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

கடந்த 21 திகதி பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  ரஞ்சித் அசோகவிடமிருந்து    நியமன கடிதத்தை பெற்றுக் கொண்ட க.கனகேஸ்வரன் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்

அதனை தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது

 குறித்த நிகழ்வில்,  முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர்,  பிரதேச செயளாலர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் , மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அரசாங்க அதிபர்,

மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் காணப்படும் காணி விடுவிப்பு,சட்டவிரோத மணல் அகழ்வு,சுற்றுசூழல் பிரச்சினை,கழிவகற்றல் ,வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் கீழ் காணப்படும் காணிகளை விடுவிக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட உள்ளதாகவும் அதே நேரம் மாவட்ட அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்தி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.


மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் கனகேஸ்வரன்.samugammedia வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்றையதினம் காலை (23)  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்கடந்த 21 திகதி பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  ரஞ்சித் அசோகவிடமிருந்து    நியமன கடிதத்தை பெற்றுக் கொண்ட க.கனகேஸ்வரன் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்அதனை தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது குறித்த நிகழ்வில்,  முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர்,  பிரதேச செயளாலர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் , மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அரசாங்க அதிபர்,மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் காணப்படும் காணி விடுவிப்பு,சட்டவிரோத மணல் அகழ்வு,சுற்றுசூழல் பிரச்சினை,கழிவகற்றல் ,வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் கீழ் காணப்படும் காணிகளை விடுவிக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட உள்ளதாகவும் அதே நேரம் மாவட்ட அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்தி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement