• May 02 2024

கால்வாய் போல் காட்சி தரும் கண்டவளை வீதி..! காற்றில் பறக்கும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள்..! மக்கள் விசனம்..!samugammedia

Sharmi / Nov 30th 2023, 2:19 pm
image

Advertisement

கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மழை காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் கால்வாய் போல் காட்சி தருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

 இந்த வீதி ஊடாகவே நாளாந்த தேவைகளை முன்னெடுக்க முடியாதநிலைகானப்படுவதாகவும் பாடசாலை மாணவர் ஆயினும் சரி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதாயினும் சரி அவசர தேவை கருதி எந்த ஒரு தேவையையும் முன்னெடுக்க முடியாத நிலையில்  எந்த ஒரு வாகனங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் வீட்டிலே அடைந்து கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பெய்து வரும் அடை மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் கூட பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருப்பதாகவும் அத்துடன் பாடசாலைகளுக்கு செல்வதாயின் ஒரு நாளைக்கு மாத்திரமே பாடசாலை சீருடை பயன்படுத்த கூடியதாக இருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலை செல்பவர்களும் முற்றும் முழுதாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். 

இது தொடர்பாக கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் இவ்வீதியை புனரமைத்து தருவதாக எமக்கு வாக்களிக்கும் படி  எமது வீடு தேடி வருவார்கள் வருகின்ற போது எமது பகுதியில் உள்ள வீதியை புனரமைத்து தருதாக கூறி எமது  வாக்குகளை  பெற்று செல்கின்றனர்.

வாக்களியுங்கள் நாங்கள் வீதியை புனரமைத்து தருகிறோம் என்று கூறிச் செல்லும் அவர்கள்  பின்னர் மீண்டும் அடுத்த தேர்தல் காலங்களில் அவர்களைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு காபட் வீதியோ, அல்லது காங்கிரீட்  வீதியே கேட்கவில்லை எமக்கு தண்ணீர் வடிந்து ஓடக்கூடியவாறு ஓர் பாதையை அல்லது கால்வாய்யாவது அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்வதுடன் , இது தொடர்பாக முன்பு பல தடவைகள் அரசு அதிகாரிகளில் முறையிட்டும் எந்தப் பயனும் அற்று போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



கால்வாய் போல் காட்சி தரும் கண்டவளை வீதி. காற்றில் பறக்கும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள். மக்கள் விசனம்.samugammedia கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மழை காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் கால்வாய் போல் காட்சி தருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த வீதி ஊடாகவே நாளாந்த தேவைகளை முன்னெடுக்க முடியாதநிலைகானப்படுவதாகவும் பாடசாலை மாணவர் ஆயினும் சரி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதாயினும் சரி அவசர தேவை கருதி எந்த ஒரு தேவையையும் முன்னெடுக்க முடியாத நிலையில்  எந்த ஒரு வாகனங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் வீட்டிலே அடைந்து கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தற்பொழுது பெய்து வரும் அடை மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் கூட பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருப்பதாகவும் அத்துடன் பாடசாலைகளுக்கு செல்வதாயின் ஒரு நாளைக்கு மாத்திரமே பாடசாலை சீருடை பயன்படுத்த கூடியதாக இருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலை செல்பவர்களும் முற்றும் முழுதாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் இவ்வீதியை புனரமைத்து தருவதாக எமக்கு வாக்களிக்கும் படி  எமது வீடு தேடி வருவார்கள் வருகின்ற போது எமது பகுதியில் உள்ள வீதியை புனரமைத்து தருதாக கூறி எமது  வாக்குகளை  பெற்று செல்கின்றனர்.வாக்களியுங்கள் நாங்கள் வீதியை புனரமைத்து தருகிறோம் என்று கூறிச் செல்லும் அவர்கள்  பின்னர் மீண்டும் அடுத்த தேர்தல் காலங்களில் அவர்களைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு காபட் வீதியோ, அல்லது காங்கிரீட்  வீதியே கேட்கவில்லை எமக்கு தண்ணீர் வடிந்து ஓடக்கூடியவாறு ஓர் பாதையை அல்லது கால்வாய்யாவது அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்வதுடன் , இது தொடர்பாக முன்பு பல தடவைகள் அரசு அதிகாரிகளில் முறையிட்டும் எந்தப் பயனும் அற்று போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement