• May 02 2024

காங்கேசன்துறை- காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் சிக்கல்...!samugammedia

Sharmi / May 3rd 2023, 12:04 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை- காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் சிக்கல்.samugammedia யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement