• Oct 30 2024

கதிர்காமம் எசல பெரஹெரவில் பதற்றத்தை ஏற்படுத்திய யானை - 13 பேர் வைத்தியசாலையில்

Chithra / Jul 7th 2024, 11:35 am
image

Advertisement


வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து பெரஹெர உற்சவத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கதிர்காமம் எசல பெரஹெரவில் பதற்றத்தை ஏற்படுத்திய யானை - 13 பேர் வைத்தியசாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து பெரஹெர உற்சவத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement