• May 02 2024

கட்டிப்புடி வைத்தியம் இலவசம் : நூதன முயற்சியில் இறங்கிய யுவதிகள்!

Sharmi / Dec 25th 2022, 9:58 am
image

Advertisement

பெங்களூருவை சேர்ந்தவர்கள் அபூர்வ அகர்வால்(19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22). இருவரும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சர்ச் தெருவில் கைகளில் பிரீ ஹக்ஸ் என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர்.

ஆண், பெண் என ஒரு மணி நேரத்தில் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

'சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டதாகவும், அதில் மனிதர்கள் ஒருவருக்கு  ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக,  மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது.. இன்றைய நகர நாகரீக வளர்ச்சியில் ஒருவரை ஒருவர் நின்று கட்டி ஆரத்தழுவ நேரமின்றி வேலை, படிப்பு என பல்வேறு எண்ணங்களை குறிக்கோளாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்' எனத் தெரிவித்துள்ளனர்.   

கட்டிப்புடி வைத்தியம் இலவசம் : நூதன முயற்சியில் இறங்கிய யுவதிகள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் அபூர்வ அகர்வால்(19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22). இருவரும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சர்ச் தெருவில் கைகளில் பிரீ ஹக்ஸ் என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர்.ஆண், பெண் என ஒரு மணி நேரத்தில் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,'சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டதாகவும், அதில் மனிதர்கள் ஒருவருக்கு  ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக,  மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது. இன்றைய நகர நாகரீக வளர்ச்சியில் ஒருவரை ஒருவர் நின்று கட்டி ஆரத்தழுவ நேரமின்றி வேலை, படிப்பு என பல்வேறு எண்ணங்களை குறிக்கோளாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர்.அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்' எனத் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement